தூக்கம்

தூக்கமே...!
நீ இறைவன் கொடுத்த வரம்
கட்டாந்தரையில் அயர்ந்த தூக்கமும்
பஞ்சு மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் இல்லாமல் தவிப்பதும் விந்தையே...
தூக்கமே...!
நீ மனிதனுக்கு தினம் தினம்
புதுப்பிறவி புத்துணர்ச்சி
அளித்து மகிழ்விக்கிறாய்...
தூக்கமே...!
நீ இடம் பொருள் ஏவல்
தெரியாமல் வந்து சிலரை
துன்பப்படுத்துகிறாய்...
தூக்கமே...!
உன்னை வரவழைக்க
என்ன என்ன யுக்திகளை
கையாள்கிறான் மனிதன் தெரியுமா
குழந்தைகளுக்கு தாலாட்டு
இளம் வயதினர்களுக்கு
மெல்லிய இசை
வயோதியர்களுக்கு மாத்திரை
உழைப்பாளிகளுக்கு மட்டும்
வரவேற்பு இல்லாமலே நீ வந்துவிடுகிறாய்...
தூக்கமே...!
நீயொரு ஊக்கமருந்து
நீயொரு அதிசயம்
உன்னால் கனவு எனும்
மாயலோகத்திற்கு சென்று வருகிறான் மனிதன்...
தூக்கமே...!
சிலர் உன்னை கடிந்துகொள்கிறார்கள்
உன்னை கேவலமாக ஏசுகிறார்கள்
ஆனால் நீ இல்லையேல்
இந்த உலகமே இல்லை
மனித குலத்திற்கு நல்வாழ்வே நீதான் என்ற உண்மை மறந்து...
தூக்கமே...!
நீ ஆக்கபணிகளுக்கு
வந்துவிடாதே
மாணவன்
படிக்கும் போது வந்துவிடாதே
ஓட்டுனர்கள் பணியில் உள்ளப்போது வந்துவிடாதே
புதுதம்பதிகளின்
முதல் இரவிலே வந்துவிடாதே...
தூக்கமே...!
உனக்கொரு வேண்டுகோள்
பேரழிவுகளுக்கு நீ நிரந்தரமாக
வந்துவிடு அதை மட்டும் விழிக்கவைக்காதே...