மாற்றங்கள் ஆயிரம் பாகம் 2

குமார் தன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்கிறான்,, அங்கு ஒரு பெண்ணை கண்டு அவள் மேல் காதல் கொள்கிறான்,,, அவர்கள் காதல் நல்லமுறையில் தொடர்ந்தது , ஆனால், பெண்ணின் குடும்பம் அவ்வளவு வசதியான குடும்பம் கிடையாது,, அவளுக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தங்கை,, என குடும்பம் சற்றே பெரிதாக இருந்தது,, அனைவரும் கடுமையாக உழைத்து தான் குடும்பத்தை முன்னேற்ற வேண்டிய நிலை,,, இப்படியாக இங்கே அவர்கள் காதல் தொடர குமாரின் வீட்டில் அவனது அக்காவிற்கு திருமணம் இனிதே நடைபெறுகிறது,,,,

இவர்களின் காதல் இப்படியாக தொடர குமாரின் ஒரு தங்கைக்கு திருமணம் நடைபெறுகிறது,,,,,, இந்நிலையில் வீட்டில் தன்காதலை தெரிவிக்க தன் காதலியுடன் தன் சொந்த ஊருக்கு செல்கிறான்,, அங்கே அவன் வீட்டில் அவனுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க,, தன் அக்காவின் கணவன் முன்னிலையில் அந்த ஊரில் உள்ள சிறு கோவிலில் தன் காதலியை தனக்கு மனைவியாக்கி கொண்டு தன் வீட்டிற்கு செல்கிறான்,,
இங்கு இவ்வாறு நடக்க அங்கே அந்த பெண்ணின் வீட்டில் அவளது அக்கா உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் இறந்து விட்டாள்,,, இந்நிலையில் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்திருக்க இவள் சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு சென்றது அவர்கள் குடும்பத்தை மிகவும் பாதித்ததால் இவளை அனைவரும் வெறுத்தனர்,,,,,

கணவனின் குடும்பத்திலோ மாமியார் முதல் நாத்தனார் வரை அனைவரின் கொடுமைகளும் சேர்ந்து கொண்டது,, இந்நிலையில் கணவன் திருமணமான நான்கே மாதத்தில் வெளிநாடு பயணம் மேற்கொள்ள இவள் தன் மாமியார் வீட்டில் நரக வேதனை அனுபவித்தாள்,,,,
கணவரிடமும் சொல்ல முடியவில்லை,, பிறந்த வீட்டிற்கும் போக முடியவில்லை ,, இதெல்லாம் அவளை மென்மேலும் வாட்டியது,,, அனைத்தையும் கடந்து கணவன் வரவை எதிர்நோக்க அடுத்தது ஒரு அதிர்ச்சி அவளுக்காக காத்திருந்தது,,,,,,,,

அந்த அதிர்ச்சி என்ன ??? அது இன்ப அதிர்ச்சியா இல்லை அதுவும் அவளின் சோதனையா அடுத்த பாகத்தில் பார்க்கலாம் !!!!!!!
காத்திருங்கள் ,,,,,,,,,,,,,,...........................

எழுதியவர் : ஸ்ரீஜே (3-Jan-18, 10:51 pm)
பார்வை : 121

மேலே