காதல் பேசும் வரிகள்
திருவிழாத்திடலில்
தேரோடும் வீதியில்
தேவதையாய்
தோன்றியவளே....
கருங்கூந்தலின் பின்னலோடு
மணம் வீசும் மல்லிகை..
இரவு மேகத்தின்
விண்மீனாய்
நெற்றிப்பொட்டு...
அற்புதமாய்
அன்புமொழி பேசும்
கண் இமைக்கு
கலகலவென ஓசை
வளையல்...
வருகையின்
வழிபாதைப் பேசும்
உந்தன் முத்துக்கள்...
மாலைத் தென்றலில்
மாயமானவளே...
மல்லிகை மலரோடு
மணவாளனாய்
காத்திருக்கிறேன்
மணமகளே....