குளிர் நிலவே என் கொடி மலரே

*******************************
குளிர் நிலவே
என் கொடி மலரே...
*******************************

அழகிய சாலையோரம் ;
அதிகாலை நேரம்;
வண்ணக்கோலம் போடும்;
மயில் போல் அசைந்தாடும்;
முழுமதியாய் உன்னைக் கண்டேன்....

கண்ட நொடியே,
தென்றலையும் ; திங்களையும் வெறுத்தேன்...
உண்ணவும்;உறங்கவும் மறுத்தேன்....
தேவையில்லாமல் சிரித்தேன்...
முழுமையாய் உன்னுள் சிக்கித்தவித்தேன்...

சில தருணம்,
கொட்டும் அருவியும் ; வெற்றுப்பாறையும்
சேர்ந்தது போல,
உந்தன் காதல் பார்வை
என்னைக் கொல்ல,
அதை அறிந்தும் அறியாதது போல் நீ செல்ல,
என் மனம் அதையும் ரசித்தது மெல்ல....

உன் பார்வை போதுமே,
உன் மனதை உணருவேன்!
ஒரு வார்த்தை சொல்லடி,....
என் பேச்சில்,மூச்சில்
உன்னை மணந்து
சாவேன்;வாழ்வேன்.....

நான் , இங்கு உன்னை மட்டும் நினைக்கிறேன்;
கூடவே உன் நினைவை மனதினில் சுமக்கின்றேன்;
இந்த உலகம் முழுவதும்,
நம் இருவர்க்காக தான்;
இங்கு நீயும் நானும் தமிழும்இசையும்
இயற்கையோடு சேர்ந்து வாழலாம்.....

மா.பானுமதி...

எழுதியவர் : பானுமதி (7-Jan-18, 8:18 pm)
சேர்த்தது : மதி
பார்வை : 315

மேலே