ஏழேழு ஜென்மங்களிலும் இதே பிறவி வேண்டுமே

உயிாினும் உயிராய என் உதிரமே
உவமையாக கூறவா என் கவிதையில் உன்னை
உன் நிழலி்ல் நானறிந்தேன் இவ்வுலகில்
நிழலாய் என்றும் தொடர்ந்தேன்
நீ செல்லும் வழிகளில்
நீளம் குறைந்த இரவில் நீண்ட நேரம் பேசும் தருணம்
மாயந்து போக கூடுமோ வரும் நாட்களில்
உன் கைவண்ணத்தால் அரங்கேற்றிய அழகு ஓவியங்கள் என்றும்
உன் நினைவலைகளால் ததும்புமே நம் வீட்டில்
சின்ன சின்ன சண்டையால் சினுங்க வைக்கும் கண்கள் இன்று
உன் அன்பு சண்டையால் ஏங்க வைக்கின்றதே
கனா உலகில் காட்சியளித்தால் ஏழேழு ஜென்மங்களிலும் இதே பிறவியில் நீடிக்க
இறைவனிடம் வரம் கேட்பேன் என் அன்பு சகோதரியே.........
- சஜூ

எழுதியவர் : - சஜூ (10-Jan-18, 7:32 pm)
சேர்த்தது : சஜூ
பார்வை : 106

மேலே