கம்பனின் அழகு கவி அழகிக்கு
நூற்றாண்டு கண்டிறாத நூறுகோடி அழகு
நூறுகோடி அழகை கவியாக்க எண்ணினான்
பேரழகை கவியாக்க கம்பனை வேண்டினான்
பொன்னைப் பொருளாக்கக் கம்பனும் தோன்றினான்
அழகை அழகாக்க அழகுகவி ஏற்றினான்
சீதையிடம் மிஞ்சி சிந்திய சுந்தரி
சீதைக்கு நிகராக சித்திரம் இவளே
சொர்ணத்தில் செதுக்கிய வர்ணிக்கியலா சிலையோ
சொர்கத்தில் சேராத நான்காவது அழகியோ
தீக்குச்சி நெருப்பாய் நெற்றியில் திலகமும்
பச்சரிசி வெண்மையாய் பளிச்சிடும் பற்களும்
பாரையே வீழ்த்திடும் கடைக்கண் பார்வையும்
பருத்திப் பஞ்சிபோல மெர்துவான கன்னமும்
பல்வக்குத் தூக்கியதுபோல மெதுவான நடையும்
சூரிய நிலவை ஒன்றாகப் பார்த்தேன்
சுந்தரி இவளைக் கண்ணாரக் காண்கையிலே
மைதானம் முழுக்க மல்லிகை மலராக்கி
மைதானம் வாசல்வழி மங்கையவள் வந்தாலே
மல்லிகை வாசமெல்லாம் தோற்றுதான் போகும்
வண்டுகள் கூட்டமெல்லாம் மங்கையிடம் ஓடும்
மௌனமாய் வண்டுகள் குழம்பித்தான் பார்க்கும்
மலர்வடிவில் மங்கையா மங்கைவடிவில் மலரா என்று
இவ்வளவு அழகி இவ்வுலகில் இல்லை
எழுத்துக்கள் என்னிடம் கெஞ்சித் தொல்லை
அழகியின் கவியில் நானும் வேண்டுமென்று
-முகிலன். ம