எவன் கேட்பான்

சட்டம் என் சட்டை அதை
இஸ்டம் என மாற்றுவேன்
எவன் கேட்பான்?

நீதி பிறர்க்கு அநீதி
அநீதி எனக்கு நீதி யென
நான் சுட்டும் விரலா யிருப்பான் தலைமை நீதி- என்னை
எவன் கேட்பான்?

காவல் படை யெனைக் காக்க
உன்னை அடக்க
காலடி என இவன் கிடக்க
சிறு புல்லென உன்னை மிதிக்கச் செய்வேன்- என்னை
எவன் கேட்பான்?

வரி நான் சொல்வதே வரி
விதி நான் சொல்வதை செய்வதே உன் விதி
மிதி இவன் சேமிப்பை மிதி
திட்டம் என் சேமிப்பில் சேர்க்கும் திட்டம் யென விதிப்பேன்- என்னை
எவன் கேட்பான்?

நஸ்டம் பேருந்து சேவையில் நஸ்டம்
இஸ்டம் எங்கள் கட்சியின் பெயரில் பேருந்து தொழிற்சங்கம் அமைப்பது எங்கள் இஸ்டம்
கஸ்டம் அதில் பயனிப்பது உங்களுக்கு கஸ்டம்
கை வைப்போம் உங்கள் வருங்கால வைப்புகளில்
அதை மொய் வைப்போம் எங்கள் வருங்கால சந்ததிகளுக்கு பினாமிகளில்- என்னை
எவன் கேட்பான்?

நான் மந்திரங்களை ஓதிடுவேன்
ஜி.எஸ்.டி யென சொல்லிடுவேன்
மந்திரத்தில் தலை மயங்கிடுவான்
சொல்லும் சொல்லிற்கு ஆடிடுவான்
காது கேளாமல் புலம்பிடுவான்
எனக்கெதிரே வாய் மூடி சென்றிடுவான்
நானோ இவனை ஆட்டுவித்து
ஜி.எஸ்.டியில் கொள்ளை அடிப்பேன்- என்னை
எவன் கேட்பான்?

எங்கள் கட்சித் தலைவர்களுக்கு நூற்றாண் டென்போம் இல்லை
தமிழர்களுக்கு மாநாடு யென்போம்
கண்காட்டி வித்தைக் காட்டி
இவன் விளி காணிட களவாடுவோம் அந்நிதியை-
எவன் கேட்பான்?

கறுப்புப் பண ஒழிப்பென்போம்
உயர் மதிப்பு கொண்ட ரூபாயை
பாதாளறையில் அடுக்கிடுவோம்
இவன் பெற தினம் பல விதிகளை விதித்திடுவோம்
ஒரு நோட்டுக்கு பலரை எரித்திடுவோம்
இந்த தந்திரத்தில் சிலரை வீழ்த்திடுவோம்
நாங்கள் மட்டும் மாட்டமாட்டோம்-என்னை
எவன் கேட்பான்?

விதை ஓர் விதை பல விதையென சேர்ந்திட நினைத்தால்
படம் கருத்துப் படமென
என் முகத்திரையை கிளித்தால்
சிறை உனக்கு தனி சிறையென சிறையிலிடுவேன்-என்னை
எவன் கேட்பான்?

இவன் போராடவும் மாட்டான்
போராட்டக் களம் புகுந்திடமாட்டான்
முகநூலில் சில அநீதிகளை பிரறிய பரப்பிடுவான்
யெனக்கென்ன என்று தனித்திருப்பான்
எம் தொகுதிப் பக்கம் ஓட்டு்க் கேட்டு வாராதே யெனக் கூச்சலிடுவான்
கேள்விக் கேட்கும் உரிமைகளை ஓட்டுக்குப் பணமென விற்றிடுவான்
இவனிருக் கையில் என் கொள்ளை தொடரிடுவேன்-என்னை
எவன் கேட்பான்?

இதோ பேருந்து துறையில் கொள்ளை
இவன் தலையில் இதன் தொல்லை- என்னை
எவன் கேட்பான்?
எவன் கேட்பான்?

எழுதியவர் : ச. செந்தில் குமார் (21-Jan-18, 6:36 am)
Tanglish : evan ketpaan
பார்வை : 476

மேலே