ஈரார்

ஈரார் என்போர் இழிக்
குலத்தோர் அல்லவே...!

ஆதியும் அந்தமும் இலா
முக்கண்ணனும் தன்னுருவில்
பெண்ணுருவம் ஏற்றி
மூன்றாம் பாலினத்தரின்
சிறப்பு உயர்த்தினாரே...!

பெண்ணின் மதி வலிமையும்
ஆணின் உடல் வலிமையும்
ஒருசேர ஒருமித்த உயர்
குலத்தோர் இவரே....!

மரபணு இடறியமைக்கு
இவரை இழித்திடலாகதே...!
துரதிடலும் ஆகாதே இவர்
திறம் தூற்றிடலும் ஆகதே...!

யாவரு தூற்றலை விடுத்து
இவர் திறம் போற்றி
ஏற்றி பார்ப்போமே பார்
முட்டும் புகழ் உச்சி நிற்பாரே....!

எழுதியவர் : விஷ்ணு (22-Jan-18, 5:51 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே