கனவு பலித்தது

அந்தோ வானவில் என்னும் கூவல் எங்கோ கேட்டிட,

வானம் பார்த்தபடி உணர்ந்தான்,தன் வாழ்கையும்

அவ்வானமும் நிரம்பா குடமென.

கறை கொண்ட உடையும்,நரை கொண்ட மயிருமே எஞ்சி இருந்தவை;

கிழிந்த போர்வையுடன் போர் புரிய சக்தியின்றி கண்கள் மூடினான்;

சற்றே நீண்ட ஒலி எழுப்பிய சிற்றுந்து அருகே நின்றிட,

புரியா மொழியில்,தெரியா பெயர்களை பற்றி பேச கேட்டான்

அரை இமை திறந்த படி கண்டறிந்தான் கயவரை

தனக்கேன் வம்பென இமைகள் மூடியவன்,சில மணி கடந்து விழித்தெழுந்தான்

சிற்றுந்து சகோதரரை எண்ணி நகைத்தபடி,தன கரத்தினடியே

ஓர் மணிக்கூண்டு இருப்பதை அறிந்தான்

கரம் கொண்டு பார்க்கையில்,தன் முகம் கூசிட, வானம் பார்த்தவுடன் "இரவு தானே?!" என்ற கேள்வியை எழுப்பியது அவன் முகம்

கழுதை கற்பூர வாடையை அறிந்தது, விற்றான் மணிக்கூண்டை.

வருடங்கள் ஓடின,செல்வங்கள் பெருகின;

தன் அரண்மனை முகப்பில் இருந்த நாற்காலியில் கால்கள் ஒன்றன் மேல் ஒன்று அமைந்திட, அமர்ந்தான்.

அவை ஓர் கூழங்கல்லின் மீது மோதின;

எட்டி உதைத்த வண்ணம் உணர்ந்தான், கூழாங்கல் கயவரின் பிட்டமென.

கண் இமைக்கும் நேரத்தில் சுடப்படுகிறான்

கனவு கலைந்தது,மணிக்கூண்டினை தரையில் பார்த்தபடி,

தன்னை நினைத்து நகைத்தான்;மேல் திசை நோக்கி பயணம் செய்ய துவங்கினான்.

கனவு காணும் நேரத்தில் அதனை எட்டி விடலாம்!

கனவு காணாதே!!



- சு.இரமேஷ்

எழுதியவர் : Ramesh S (31-Jan-18, 9:18 am)
சேர்த்தது : Ramesh S
Tanglish : kanavu palithathu
பார்வை : 171

மேலே