ஹைக்கூ
எல்லா ஊரிலும் ஒரு வெண்புறா
தென்னையிலிருந்து விடுபடும்
பிறை நிலா
*
நிலாவின் கீழ்
எப்போதும் இருக்கும்
சில நினைவுகள்
*
வனத்தில் வசந்த கூடுகள்
ஆஹா ..
வானத்தில் பௌர்ணமிக்கூடு
*
அந்தப்புரத்திலும் மேன்மாடத்திலும்
இரவெல்லாம் உலவுகிறாள்
முகில்கோட்டை ராணி
*
அமாவாசை இரவு
எங்கு தவிக்கிறதோ
பிள்ளை நிலா ........? ..........(மீள்)
*
கவித்தாசபாபதி