வாழ்க்கை ஒரு நீரோடை
வாழ்க்கை ஒரு நீரோடை
துன்பங்களும் இன்பங்களும் அதன் சலனங்கள்
பொய்யாத பொருளாதாரத்தில் அது
ஒய்யார புனலாகி ஓடும்
பட்ஜெட் தடுமாற்றத்தில் அதன் தட தட மாறி
பேத தாளங்களில் சீரின்றி ஓடும்
பொய்க்கும் அரசுகளின் பொருளாதாரத்தில்
நீரோடை நீரின்றி வறண்டு வெண்தரையாகிப் போகும்
வாழ்க்கை ஒரு நீரோடை அது என்றும்
வசந்தத்தையே தேடும்
அதன் இனிய இன்னிசை ராக ஆலாபனையே
மானுடத்தின் கனவு !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
