நிறம் தான் இவ்வுலகை மாற்றுமோ

நிறம் தானோ நம்மை பிரிக்கும் ஆயுதமோ
இவ்வேற்றுமை தான் நம்மை அந்நியமாய் பார்க்க வைக்கும் அயல் நாட்டு யுத்தியோ
வெள்ளையென்றும் கருப்பென்றும் நிறம் வேற்றுமை கண்டு தீண்ட தகாதவர்களாய் ஆக்கியதும் இந்நிறம் தானோ
மானிடா நீ செய்யும் வேலைக்கு கூட நிறத்தால் திறமை மறைந்து போகின்றதே
நிறம் வைத்து லாபம் ஈட்டும் அழகு சாதனப்பொருட்கள்
வெண்நிறமே உயர் என்றும் கருநிறமே தாழ்வென்றும்
எண்ணி ஊனில் ஓடும் உதிரமும் ஓர் நிறமென்று அறியாத
மாக்கள் வாழும் இடத்தில் இருப்பதும் நஞ்சு தானே தோழர் தோழியரே...

எழுதியவர் : பிரகதி (4-Feb-18, 8:56 pm)
பார்வை : 1150

மேலே