எட்டாம் நாள் - இன்ப நினைவுகள்
எட்டாம் நாள் - இன்ப நினைவுகள்
எட்டாம் நாளில் சந்தித்தோம்
சில நிமிடங்கள் சிந்தித்தோம்
தேவதையாய் ஊதா சேலையில் இருந்தாள்
கயல் விழிகளால் என்னுடன் உரையாடினாள்
கண்களின் உரையாடல்
மேதாவி என்று இருமாந்திருந்த நான் அவள் கண்களைக் கண்டதும்
நீராவி போல் கரைந்து போனேன்
பாவையின் பார்வையில் பாசுரம்
என் கண்ணிலோ காவியம்
அவள் ஆடினாள் அம்மானை
என் மனம் வேண்டியது அம் மானை
அவள் பேச்சில் யதார்த்தம்
என்னிலோ ஏகாந்தம்
என்ன மணக்கிறதே என்றேன்?
என்னை மணக்கிறேன் என்றாள்
நீ என் அகம் என்றேன்
நீ என் அகிலம் என்றாள்
இரு மனமும் திருமணத்திற்கு ஏகமனதாய் இசைந்தது
இணைந்தோம்
இரு உள்ளங்களும் இன்புற்றன
இரு குடும்பங்களும் மகிழ்ந்தன
இந்நாள் வாழ்வில் பொன்னாள்!!!
ராரே