வாழ்வியல்

எழுத்திற்கும்
சொற்களுக்குமான
கருத்தாடலில்
மெளனமே
வெற்றிவாகை
சூடுகிறது...

இடையே
எட்டி நின்று
வேடிக்கை
பார்க்கின்ற
பிரஜைகளாகின்றன
உணர்வுகள்...

வேள்வி
பலிகளாகின்றன
அன்பும் பாசமும் ...

எழுதியவர் : சிவயாட்சி (7-Feb-18, 10:57 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : vaazviyal
பார்வை : 127

மேலே