மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 9

#மூர்ச்சையற்ற_பொழுதுகள்_௯

கனவுகளை தகர்த்தெறிந்த நிகழ்வுகளுக்கு முன்னால் சில நிஜமான நினைவுகள் நெருஞ்சி முள்ளாய் குத்தி இதயத்தை குற்றுயிராய் கொன்று குவித்து கொண்டிருந்தது.
அது அவளின் விழிகள் கார்த்திக்கின் இதயத்தில் பதிந்து,
காதலெனும் கிளர்ச்சி முதன் முதலாய் ஏற்பட்டிருந்த தருணம்.
அவளின் வருகைக்காக காத்திருந்த முதல் நாளே அவளின் பாராமுகம் அவனை பாடாய் படுத்தியெடுத்தது...
அவள் தனக்காகதான் படைக்க பட்டாள் என்பதை கண்மூடித்தனமாய் நம்பினான்.
அவனக்குள் ஏற்பட்ட உணர்வுகளின் கூட்டமைப்பை போல,
அவளுக்குள்ளும் தனது பிம்பங்ளின் குவியல் குருதியிலே கொட்டி கிடக்க கூடாதா என ஏங்கினான்..

சற்று நேரத்தில் பேருந்து வந்தது ..பெண்கள் எல்லோரும் முன்னாடி ஏறி கொள்ள கார்த்திக் பின்னாடி ஏறி வாசலில் நின்றபடி அவள் தெரிகிறாளா என எட்டி பார்த்து கொண்டிருந்தான்..பள்ளி கூட ஸ்டாப் வந்து விட்டது .. பேருந்தின் மைய பகுதியில் அவளின் தோழிகளில் சிலர் தீவிரமாய் பேருந்தை புரட்டி போட்டு ஏதோ ஒன்றை தேடி கொண்டிருந்தனர்.
அவளின் முகம் தேடி களைத்து வாடி போயிருந்தது.விலையுயர்ந்த பொருளைதான் தவறவிட்டிருப்பாள் என்று மனசுக்குள் எண்ணியவாறு அவளின் தோழியிடம் விசாரித்தான்.
அவள் தொலைத்ததாத சொல்லிய பொருளை அவர்களோடு அவனும் சுற்றிலும் தேடி பார்க்க தொடங்கினான்.
அதற்க்குள் எல்லோரும் இறங்க ஒவ்வொருவராய் கலைந்து சாலையில் ஒருவரோடு ஒருவராய் கலந்து சென்று காணாமல் போயினர்.

கார்த்திக் பேருந்தை விட்டு வெளியே தலை நீட்டி பார்த்தான்.
பேருந்து நிலையத்தின் இருக்கையில் மாலதி தலை குனிந்து கலங்கி கொண்டிருந்தாள்.
மெதுவாய் அவளின் தோளில் பின்புறம் அவனின் நிழல் படிவதை பார்த்து பதற்றமடைந்தாள்.
கண்ணில் கோர்த்த நீரை அவனுக்கு தெரியாமல் திரை போட்டு மறைத்து கொண்டாள்.
கார்த்திக் தன் சட்டை பையில் வைத்திருந்த சில்வர் முலாம் பூசிய பேனாவை அவளின் விழிகளுக்கு எதிரே காட்டினான்.
மறைத்து வைத்திருந்த. கண்ணீர் துளிகள் தொபுக் கென்று கீழே விழுந்தது அவளிடமிருந்து.

தா..த்..தா
என்று தேம்பிய குரலுடன் அவளின் தாத்தா கொடுத்த நினைவு பரிசு கிடைந்ததும் நெஞ்சு விம்மி புடைத்து பெருமூச்சு விட்டது.
அன்று அவள் தாத்தாவின் நினைவு நாள் கூட.
அவளின் கைவிரலால் பேனாவை அவனின் விரல் கூட தீண்டாமல் பறித்து விட்டு வேக வேகமாய் திரும்பி பார்க்காம நடக்க எத்தனித்தவளை,
ஏய் மாலு ப்ளீஸ் நில்லேன்.எதுக்கு என்னை பார்த்தும் பராததுமா போற உன்னை முதன் முதலா பார்த்து எவ்ளோ பேசணும் னு நினைச்சேன் தெரியுமா ,அடலீஸ்ட் என்னை உனக்கு அடையாளமாச்சு தெரியுதான்னு சொல்லு..
உன்னை இவ்ளோ நாள் கழிச்சு பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல தெரியுமா ..
நம்ம மறுபடியும் சந்தித்ததுக்காக நான் ஒன்னு கொண்டு வந்துருக்கேன் என்று பாக்கெட்டில் இருந்து அவள் காலையில் தவற விட்ட ஒற்றை ரோஜாவை மாலதியின் கையில் திணித்தான்..

அவளின் முகம் சோகத்தில் இருந்து நிறமாறிக் கொண்டிருந்தது ...
இன்னும் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க வில்லை ..
எனக்கு என்ன பேசுறதுனு தெரியல..எல்லோரையும் போல எல்லாத்தையும் எல்லா நேரமும் வெளிப்படுத்திற முடியாது...இவ்ளோ நாள்ல எவ்ளோவோ மாறிருச்சு ..
நம்ம ஊரு பஸ் ஸ்டாண்ட்ல நின்னு யாரிடமும் பேசுற அளவுக்கு எனக்கு தைரியம் லாம் இல்ல..உங்களுக்கு எங்க வீட்டை பற்றி தெரியாது ...
எனக்கும் பேசணும் னு தான் தோணுச்சு பட் எதோ தடுத்துருச்சு ...

ஓகே ஒரு பிரண்ட் னு நினைச்சு பேசலாம் ல என கார்த்திக் அவளை பார்க்க ..
பிரண்ட் னு நினைக்க போய்த்தான் உங்ககிட்ட இப்போ நின்னு பேசிகிட்டு இருக்கேன் என கார்த்திக்கை நிமிந்து பார்த்தாள்...
இவ்ளோ அருகில் அவள் கண்களை கண்டதும் மூச்சின் வேகம் மூச்சிரைக்க்க ஆரமித்தது அவனுக்குள்..
ம்ம் கொஞ்சம் இருமி தன் நிலையிலிருந்து வெளியேற முயன்றான்..
ஆமா என்ன சப்ஜெக்ட் எடுத்திருக்க
maths ,, நீங்க
நான் commerces
எப்போதும் இந்த பஸ்லதான் வருவியா..
ம்ம் ...நீங்க
நான் இனிமேல் இந்த பஸ்லதான் என்றவுடன் அவளை மீறி சிரிப்பு சப்தம் வெளியே கேட்டது...
இப்போலாம் நீங்க ரொம்ப பேசுறீங்க ...
நீயும்தான் இப்போ ரொம்ப அழகா இருக்க என சொல்ல வெட்கத்தில் இன்னும் அவளின் முகம் சிவந்தது..
சரி நான் போறேன் டைம் ஆகுது என அவள் கிளம்ப,
ஈவினிங் எந்த பஸ்க்கு வருவ...
எதுக்கு
இல்ல சும்மா கேட்டேன்..
சும்மா 5 மணிக்கு வருவேன் என சிரித்து விட்டு தூரமாய் சென்று ஒரு திருப்பத்தில் மறைந்து விட்டிருந்தாள்..

அவளை பின் தொடர்ந்த சென்ற அவனின் இதயம் அன்று மாலையே எதிர்பாராத விதமாய் விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகும் என்று கார்த்திக் நினைத்திருக்க மாட்டான்....

யாரால்..
ஏன்..
நாளை தொ_ட_ரு_ம்.

எழுதியவர் : சையது சேக் (10-Feb-18, 5:41 pm)
பார்வை : 208

சிறந்த கவிதைகள்

மேலே