தமிழாள வேண்டும்
உரக்க முரசு கொட்டிட
உலகம் முழுதும் நடுங்கிட
இடிமின்னல் சேர்ந்து இடித்திட
இமயம் உனைக் கண்டு வியந்திட
தமிழா தமிழா நீ வாடா
உன் தலைமைதான் வேணும் நீ வாடா
(தமிழ்நாட்டை தமிழனே ஆளணுமே
தரணியெல்லாம் உன் புகழ் பரவணுமே)
தமிழ்மொழி நமது உயிர்மூச்சு
அதன் தனித்துவம் இப்ப எங்கே போச்சு
வேற்றிட மொழியினம் ஆள நினைக்குது
அதை மாத்திட தமிழினம் ஏன் மறக்குது
தமிழா தமிழா நீ வரணும்
உன் தலைமையில் மாற்றங்கள் கொண்டு வரணும்
(தமிழ்நாட்டை தமிழனே ஆளணுமே
தரணியெல்லாம் உன் புகழ் பரவணுமே)
விவசாயம் செஞ்ச உழவன் எங்கே
அவன் விதையோட மண்ணுக்குள்ளே புதையுறானே
கடல் போன மீனவன் கடலுக்குள்ளே
அவனை கண்டுக்காத அரசியல் தேவையில்ல
தமிழா தமிழா நீ வரணும்
உன் தலைமையில் மாற்றங்கள் கொண்டு வரணும்..
(தமிழ்நாட்டை தமிழனே ஆளணுமே
தரணியெல்லாம் உன் புகழ் பரவணுமே)