பொஞ்சாதி நீயாச்சு

கருகருன்னு கூந்தல்வைச்சு
கரிசக்காட்டுப் பூச்சூடி
கண்டுக்காம போறவளே
கடனாகொஞ்சம் மனசத்தாடி
பட்டான மேனியில
பட்டில்லா சேலைகட்டி
பட்டிக்காட்டில் போறாளே
பச்சைப்பிள்ளையா கையாட்டி
முகஞ்சுளிக்க மாட்டாம
முகம்மறைச்சு போறவளே
முந்தானைய வேட்டியில
முடிச்சுப்போட கொடுத்தவளே
அன்னநடையிடும் சின்னஇடை
அசைக்காம நிற்குது
அதைப்பார்த்த என்கண்ணு
அதிசயமாஎண்ணி சொக்குது
பொழுதெல்லாம் சாஞ்சாச்சு
பொழப்புகூட முடிஞ்சுபோச்சாச்சு
பொறாமையில போகாத - என்
பொஞ்சாதி நீயாச்சு !...