கவித்துளி

சகுனம் பார்த்துவிட்டு சாலையில் வந்தான்
இவனால் அடிபட்ட பூனை
கண்ணீருடன் இவனைப் பார்த்தது

=================================

நடனமாடிக் கிடந்தது
காற்றின் பாடலுக்கு
குளத்து நீர்

=================================

வண்ணத்துப் பூச்சியின் சிணுங்கலில்
மெல்ல மலர்ந்தது
பூ

=================================

கரையை தொட்டதை கணக்கில் ஏற்றாததால்
மீண்டும் முதலிலிருந்து எண்ணச் சொன்னது
அலை

=====================================

நஷ்டத்திலும் கஷ்டத்திலும் ஓடியது
மழைக்குப் பின்னான
காகிதக் கப்பல்

=====================================

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 1:30 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 52

மேலே