காதல் சொல்ல வந்தால்
கண்கள் படபடக்கும்
இதயம் வேகமாகத்துடிக்கும்
முகத்தில் வெட்கம் உதிக்கும்
உதட்டில் ஏக்கம் பொங்கும்
மூச்சில் அனல் பறக்கும்
தேகமெங்கும் வியர்வை சுரக்கும்
கால்விரல் கோலமிடும்
கரங்கள் நடுநடுங்கும்
அன்பு செழிக்கும்
ஆசைகள் பழிக்கும்
வாரத்தைகள் உதிராது
அச்சங்கள் குறையாது
இடைவெளி நீளாது
விட்டுவிடத் தோன்றாது
காதல் சொல்ல வந்தால் !...

