கால எந்திரம்
கால எந்திரம்
கடவுள்களை மாற்றியது.....
பூசை தொழுகை செபமென்று
வழிபாடுகளை மாற்றியது.......
பூணூல் குல்லா சிலுவையென அடையாளங்களை மாற்றியது
ஆனாலும்....
மனைவியின் பிரசவத்தில்
நாத்திகனும்-
ஆத்திகனாகிறான்
மதவெறிக்கு
பலியாகும்போது
ஆத்திகனும்-
நாத்திகனாகிறான்....!
அழ. இரஜினிகாந்தன்

