காதல் யாது

காதல்
சிலைகளை வடிக்கும் சிற்பி
காதல்
இருமனங்களை இணைக்கும் நார்

காதல்
ஓடாததையும் ஓடவைக்கும் அதிர்ஷ்டம்
காதல்
வெளியுலகை மறைக்கும் மாயை

காதல்
காதலர்களை சிக்கவைக்கும் தூண்டில்
காதல்
பல சிறகுகள்கொண்ட அதிசயப்பறவை

காதல்
காலத்தின் கட்டாயம்
காமம்
காதலர்களின் அத்தியாயம்

காதல்
இன்பத்தில் மூழ்கடிக்கும் கல்லறை
காதல்
அனைவரையும் வென்ற வல்லவன்

காதல்
தோல்வி அடைந்தவருக்கு உந்துசக்தி
காதல்
வெற்றி பெற்றவருக்கு தலைகிரீடம்

காதல்
தனிமையை வேண்டும் புத்தன்
காதல்
எல்லாம் அறிந்த சித்தன் !..

எழுதியவர் : ...ராஜேஷ்... (20-Feb-18, 8:06 am)
Tanglish : kaadhal yaathu
பார்வை : 87

மேலே