நண்பனின் துரோகம்

எர்மோன் மலைகளிலும்
உயரமான உன் துரோகங்களால்
சுடுகாட்டிலுறங்கும் பைத்தியம்போலானேன் !

நான் உனக்குள்
வியாபித்திருப்பதாய்
நினைத்துக்கொள்பவன்
நடுநிசியில் ஊளையிடும்
ஓநாய்களுக்கு ஒப்பானவனாய் !

வார்த்தைகளுக்கு வர்ணம்
பூசி
உன் அம்மாவை அடிக்கடி
கொல்லுகிறாயே உன் சத்தியங்களால் !

என் தூக்கதில் புதைகுழி
தோண்டுபவன் நீ
உன் புன்னகையாலே
பூரான்களை அவிழ்த்து விடுகின்றாய் !

எழுதியவர் : (22-Feb-18, 4:06 pm)
Tanglish : nanbanin throgam
பார்வை : 8320

மேலே