ஆயுளின் எல்லை வரை வேண்டுமம்மா நீ எனக்கு

பத்துத் திங்கள் காத்திருந்து
பக்குவமாய் ஈன்றெடுத்தாய்
பசி மறந்து தூக்கம் தாெலைத்து
அணைத்திருப்பாய் கரங்களுக்குள்
வெயில், பனி, மழை என் மீது பட்டு விட்டால்
வெறுத்துப் பேசியிருப்பாய்
காலில் கல் அடித்து விட்டால்
கல்லையே புரட்டியிருப்பாய்
பசி என்று சாேர்ந்து விட்டால்
பறவை பாேல் பறந்திருப்பாய்
நாேய் என்று படுத்து விட்டால்
சாமியையே திட்டியிருப்பாய்
வீண் பழி சாென்னவர் முன்
வில்லியாய் நின்றிருப்பாய்
ஆயுள் வரம் கேட்டு
காேயிலெல்லாம் நடந்திருப்பாய்
காேபித்த பாேதெல்லாம்
குமுறி அழுதிருப்பாய்
அடம் பிடித்த ஆசையெல்லாம்
அடகு வைத்தாவது காெடுத்திருப்பாய்
அப்பாக்குத் தெரியாமல்
அழுதாலும் தாெழுதாலும்
உனையன்றி யாருண்டு
சாமியே தாேற்றதம்மா
உன் அன்பின் முன்னால்
ஆயுளின் எல்லை வரை
வேண்டுமம்மா நீ எனக்கு

எழுதியவர் : அபி றாெஸ்னி (22-Feb-18, 4:04 pm)
பார்வை : 180

மேலே