அழகான வீடு
அளவில் சிறுத்தாலும்
அழகான வீடு!
அங்கே..
ஆசையும் இல்லை!
ஆடம்பரமும் இல்லை!!
வசதி குறைந்தாலும்
வசந்தமான வீடு!
அங்கே..
கூச்சல் இருந்தாலும்
குழப்பம் இல்லை!
அண்ணாந்துப் பார்க்கவைக்கும்
அதிசய வீடு!
அங்கே..
வாசலும் இல்லை!
ஜன்னலும் இல்லை!!
வியக்க வைக்கும்
விந்தையான வீடு!
அதற்கு..
வரியும் இல்லை!
வட்டியும் இல்லை!!
ஒருவன் மட்டுமே கட்டிய
ஒழுங்கான வீடு!
அங்கே..
மேஸ்திரியும் இல்லை!
கொத்தனாரும் இல்லை!!
ஆச்சரியமான வீடு..
அந்த அழகிய
குருவிக்கூடு!!!