மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 21

மூர்ச்சையற்ற பொழுதுகள்- ௨௧

அவர்களின் இருவரது பார்வையையும் சேர்த்து பார்த்த அந்த மூன்றாவது பார்வை அதிர்ச்சியில் உறைந்திருந்தது..

குமார் .. ...

இரண்டு வாரமாய் அவனை கார்த்திக் பார்க்கவில்லை ..ஒருவேளை அன்று அவள் கோபமாய் சென்றதால் எப்படியும் சமாதான படுத்தி மீண்டும் லவ்வ சொல்லலாம் என காத்திருந்து இருப்பான் போல..அவன் அவளை பின்தொடர்ந்து வருவது முன்பு நடந்த எதோச்சை நிகழ்வுகளின் எச்சங்கள் என நினைத்து இருந்தான்..
என் தொந்தரவிற்க்கே அவளால் இன்னும் எவ்வித நேர்மறையான உறுதிமொழியும் கொடுக்க முயலாத போது,இவனின் காதலுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவாள் என தனக்குள் நினைத்து கொண்டான் கார்த்திக்..

குமாரின் கண்கள் கலங்கி இருந்தது ...கார்த்திக் இறங்கி நடந்தான் ..
ப்ரோ கொஞ்சம் நில்லுங்கள் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..
நான் அன்னைக்கு பஸ்ஸில் ப்ரொபோஸ் பண்ணும் போது நீங்க கூட அந்த பஸ்ஸில் நின்னுங்களையே,அதுக்கு அப்புறம் கூட நான் ஒரு தடவை அவங்க கிட்ட ப்ரிண்ட்ஷிப் டே க்கு சாக்லெட் கொடுத்து லவ் ப்ரொபோஸ் பண்ணுனேன் ப்ரோ..
பட் அவங்க நான் கொடுத்த சாக்லெட்ட என கைல இருந்து தட்டி விட்டுட்டு ,இனி என் பின்னால சுத்துனா செருப்பு பிஞ்சுரும் னு சொல்லிட்டாங்க ப்ரோ..
நானும் சரி மோதல்ல வரது காதல்ல முடியும் னு நினைச்சு விட்டுட்டேன்..ஆனால் இப்போ உங்களை அவங்க பார்த்த ஒரு பார்வை இருக்கே ...ஹப்பா அத பார்த்ததும் எனக்கு புரிஞ்சுருச்சு அவங்க உங்களை லவ் பண்ணுறாங்கனு ...
சாரி ப்ரோ நான் ஏதும் உங்க ஆளுகிட்ட தப்பா நடந்திருந்தா என சொல்லி கார்த்திக்குடன் கை குலுக்கினான் குமார்.....
அதுலாம் நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல ப்ரொதர் ..
உங்க நல்ல மனசுக்கு கண்டிப்பா இன்னொரு நல்ல பொண்ணு கிடைக்கும்..ட்ரை பண்ணுங்க பிரதர் என சொல்லிவிட்டு மனசுக்குள் கொஞ்சம் சாரல் அடிப்பதை ரசித்துக்கொண்டே வீடு திரும்பினான் கார்த்திக்...

டேய் கார்த்திக் எவ்ளோ நேரமா வெயிட் பண்ணுறேன் தெரியுமா என தேனீரை உறிஞ்சியவாறு குரல் கொடுத்தான் சலீம்..
நீ எப்போடா வந்த ..ஸ்கூலுக்கு வேற நீ வரல ... அதுசரி டீ யாரு போட்டு குடுத்தா என கேட்டவரே புத்தகத்தை அலமாரியில் வைத்தான் கார்த்திக்...
சிஸ்டர்த்தான் போட்டு குடுத்தாங்க ...
அப்போ இனி இந்த வீட்டு பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்ட போல என சிரித்தான் கார்த்திக் ..
ஏன்டா அப்படி சொல்லுற ..வாரத்துல ரெண்டு நாள் வரதானடா செய்றேன்..
அண்ணா என் டீ ஆஹ் களனி தண்ணி மாதிரி இருக்குனு ஓட்டுறான்..நீங்க என்னனா அது தெரியாம வாரா வாரம் வரேன் னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று உள்ளே வந்தாள் சுபா..
உங்க ரெண்டு பேரு சண்டைல என்னை இழுத்து விடாதீங்க ...
நாளை பின்ன வந்தா ஒரு வாய் டீ கொடுக்குறது சிஸ்டர் தான் ..உனக்கென்ன நீ பாட்டுக்கு சொல்லுவா..சிஸ்டர் டீ சூப்பர் ஆஹ் இருக்கு ...என்று சொல்லி தேனீர் கோப்பையை தரையில் வைத்து விட்டு கார்த்திக்கை பார்த்து டேய் மச்சான் உன்னிடம் ஒன்னு சொல்லணும்னு தான் வந்தேன்..நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் சாந்தோம் டியூஷன் சென்டர்ல சேர போறோம் நாளைக்கு மறக்காம நைட் வந்துரு என்றான் சலீம்...

டேய் என்னடா திடிர்னு டியூஷன் லாம் சேர சொல்லுற ..நமக்கு அதுலாம் ஒத்து வருதுடா மச்சி..சொல்லுறத கேளு ..நான் வரல நீ வேணும்னா போய் படி..என்னை விட்டுரு என்றான் கார்த்திக் ...
பார்த்தியா மச்சான் எனக்காக வர கூடாதா,ஒரு மாசம் வந்து பாரு பிடிக்கலைன்னா வர வேண்டாம்..நாளைக்கு அங்க வா..உனக்கொரு சர்பரைஸ் இருக்கு ப்ளீஸ் என ரொம்ப வேண்டி கொள்ள கார்த்திக்கும் சரி என்றான்.

மறுநாள் எப்போதும் போல வகுப்பிற்கு சென்று விட்டு திரும்ப வந்து கொண்டிருந்தான் ..
நேற்று மாலதி எடுத்து சென்ற கவிதை பேப்பரை நிச்சயம் படித்திருப்பாள் ..இன்று எப்படியும் அதை பற்றி ஒப்பீனியன் சொல்லுவாள்..ஒருவேளை காதலை கூட சொல்ல வாய்ப்புண்டு என நினைத்தவாறு எப்போதும் போகும் மாலை ஐந்து மணி பேருந்தை பார்த்தவாறு நடக்க..
கண்ணுக்கு எட்டிய தொலைவில் பேருந்து திரும்பி நின்றது.
அவளை மிஸ் பன்னி விட கூடாது என்பதால் பஸ்ஸை நோக்கி வேகமாய் ஓடினான் கார்த்திக் ..அதற்குள் பேருந்துஅவன் கண்ணிலிருந்து புள்ளியாய் மறைந்து கொண்டிருந்தது..
மறைந்த புள்ளியில் இருந்து ஒருவர் அருகில் வர வர அவனுக்குள் ஆனந்த யாழை யாரோ மீட்டுவது போலிருந்த்தது...
ஆம் மாலதியும் பேருந்தை தவற விட்டிருந்தாள்..

மாலை நேரம் இரவின் கழுத்தில் மாலை சூட தயாராய் இருப்பதை ,மேகத்தின் பின்னால் வெட்கத்துடன் சூரியன் மறைந்து கொள்ள, லேசான இருளெனும் அன்பை கலந்து,நட்சத்திரங்கள் புடை சூழ தன் வெண்ணிலவு முகத்தை வானமெனும் திரையில் ஒளிசித்திரமாய் ஓட விட்டாள் இயற்கை என்னும் பெண்ணானவள்..

அவள் தனக்காகவே பேருந்தை தவற விட்டிருப்பாள் என்று மனசு அவனுக்குள் தவில் வாசித்து கொண்டிருந்தது..இப்படி ஏதோசையாக நடப்பதை தனக்காக நடப்பதாக நினைத்து கொண்டு மூழ்குவதும் ஒரு சுகம்தானே....
பேருந்து எப்போதும் அரை மணி நேரத்தில் அவர்களின் ஊரை அடைந்து விடும்,அதற்க்கு நேர்மாறாய் இன்று மாலை புறப்பட்ட பேருந்து இரவு எட்டு மணி வரை பழைய வழித்தடத்தில் மெதுவாய் ஊர்ந்து சென்றது ...இன்று எதிர்பாரதகூட்டத்தால் நிரம்பி வழிந்தனர் பயணிகள்..
எல்லோரும் ஒன்றாய் ஏறினோம்,மாலதியும் ஜெனிபரும் கார்த்திக் அருகில் மாட்டி கொண்டனர்.,.தூரத்தில் நின்றால் பார்வைகள் மட்டுமே தீண்டும்,அருகில் நிற்பதால் மனசும் கொஞ்சம் நினைவுகளை தீண்டி சென்றது..
மேலக்கடையநல்லூர் வந்ததும் பேருந்து முன்னால் செல்ல முடியாமல் முனங்கி கொண்டிருந்தது.அந்த பேருந்தின் முன் சில பேருந்துகள் போவதற்க்கு வழி கிடைக்காமல் தேங்கி நின்று கொண்டிருந்தது..போகும் வழியெல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சி கொடி சாலையை ஆக்கிரமித்து இருந்தது ..கொஞ்ச தூரத்திற்கு ஒரு போலீஸ் கும்பல் தேவை இல்லாமல் ஒவ்வொரு வண்டியையும் பரிசோதனைக்கு உட்படுத்தி தங்களை கடமை தவறாத கான்ஸ்டபிள் கண்ணாயிரம் என நிமிடத்துக்கு ஒரு முறை நிரூபித்து கொண்டிருந்தனர் ....

அதே நேரம் பஸ்ஸினுள் பயங்கர கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக முன்னால் நின்ற பர்ஹானாவிடம் "நான் அங்கு வரட்டா என்று மெல்லிய குரலில் மாலதி மெலிதாய் யாருக்கும் கேட்காதவாறு சைகையில் கேட்டாள்...
தன் அருகில் நிற்க்கும் போது இந்த வார்த்தையை உதிர்த்தது கார்த்திக்குக்கு ஏனோ அவள் அருகில் நிற்க உறுத்தியது..அவளை விட்டு விலகி,வழியை விலக்கி பேருந்தை விட்டே கீழறங்கி விட்டான் கார்த்திக் .அவனுடன் பலரும் இறங்கி இருந்தனர்.இப்போது பேருந்து கொஞ்சம் காத்து வாங்கி கொண்டு நின்றது..
அதை பயண்படுத்தி அவள் அவளின் தோழிகளின் பக்கத்தில் சென்று இருப்பாள் என்பதால் கார்த்திக்கும் அவளை பாராமலேயே முகத்தில் ஊற்றெடுத்த வியர்வைகளை துரத்த அடிபம்புவின் தண்ணீர் கொண்டு முகத்தில் அறைந்தான் ....
சிதறிய துளிகள் பேருந்தை நோக்கி சென்றது..
யாரு மேலேயும் பட்டுவிட்டதா என்று பேருந்தை பார்த்தான் கார்த்திக்..
மாலதி பேருந்தின் ஜன்னல் வழியாக தலைதாழ்த்தி கார்த்திக்கை பார்த்து கொண்டே நின்றாள்,அந்த இடத்தை விட்டு நகராமலேயே..
ஓடி சென்று உதட்டோரம் குளிர் காய மனம் நினைத்து ..
அதற்கான அவசியமே இல்லாமல் போனது அவளின் சூடேற்றிய அந்த நிமிட ஒற்றை பார்வை..
அவளின் அருகில் இப்போது பர்ஹானாவும் வந்து நின்று கொண்டிருந்தது ...
நான் விட்டு சென்ற அதே இடத்தில்..
கார்த்திக் அருகில் சென்றதும் அவன் வருகையை எதிர் பார்த்தது போல,பர்ஹானா தன் இடத்தை கார்த்திக்கிடம் கொடுத்து விட்டு மாலதியை அடுத்து இடம் மாறி கொண்டாள்..

அன்றைய தினம் அவர்கள் ஊருக்கு மு.க ஸ்டாலின் வந்து இருந்தார்..
முருகையா - பேச்சியம்மாள் இவர்களின் திருமண நிகழ்ச்சிக்காக..
அதனால்தான் எப்போதும் பதிவாக நிற்க்கும் நிறுத்தத்திலேயே நிற்காத பேருந்து கூட,பேருந்து நிறுத்தமே இல்லாத இடத்தில் கூட நிமிட கணக்கில் இளைப்பாறி கொண்டிருந்தது..
அருகில்தான் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது..
அதே நேரம் பயணத்தின் இறுதி நிலையை அடைந்திருந்தோம்..
அவளுக்கு முன்பு இறங்கி மெதுவாய் நடந்தான் கார்த்திக் ..
அவளும் ஜெனிபரும் அவனை பின்தொடர்ந்தனர்..
அவன் இன்னும் மெதுவாய் நடந்தான்..
அவளின் முதுகில் கருப்பு நிற பேக் ஒன்று குட்டி தூக்கம் போட்டு கொண்டு சுகமாய் சவாரி செய்தது..
அவர்கள் இருவரும் மூச்சு வாங்கியபடி மெதுவாக நடந்து,அவனை நெருங்கியதும் மூச்சிரைக்க வேகமாய் நடந்தனர்..
அவளின் மூச்சு சப்தமும் அவனை கடந்து முன் சென்றது அவசரமாய்..

அவசரமாய் போய் எந்த கோட்டையை பிடிக்க போற,கொஞ்சம் மெதுவா போகலாம் ல,,நேற்று எடுத்துட்டு போன லெட்டெர்க்கு எதுவுமே சொல்லாம போற என கார்த்திக் சொல்ல,
திடீரென பேக்கின் மேல் பிடி அருந்தது கீழே விழ,அருகில் திருமண நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த மாலதியின் தம்பி ஓடி வந்து அவளின் பேக்கை எடுத்து கொண்டிருந்தான்..
பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த கார்த்திக் மேலும் பின் தொடர வாய்ப்பற்று மூன்று வழி சாலையின் நடுவில் திகைத்து நின்றான்..
ஆம் அவனும் அவளும் பிரிய காரணமாய் இருந்தது அந்த சாலையின் தொடர்ச்சி..
அவளுக்குரிய பாதை அவன் செல்லும் வழிதடத்திற்க்கு எதிராக அமைந்திருந்தது..
திரும்பி பார்த்தான்..
எதிரில் அவளின் கைகளை கோர்த்தபடி சென்று கொண்டிருந்தான் அவளுடைய சகோதரன்..
அவள் வீட்டு வாசலில் ஏறி திரும்ப,திரும்பி பார்க்கும் வரை தானும் அந்த சாலையின் மையத்தில் இமைக்க மறந்து கால் கடுக்க நின்று கொண்டிருந்தான்.
இவ்வளவு நேரமாய் உணராத காதலை அவளின் விலகல் நறுக்கென்று தைத்த முள்ளை போல் குத்தி விட்டு சென்றது..
அவள் உருவம் கண்ணிலிருந்து மறைந்ததும்,உலகத்தின் கடைசி மனிதனின் தனிமையை உணர்ந்தான் கார்த்திக்..
அவளின் கையை பற்றி பிடித்து தானும் சேர்ந்தாற் போல வலது காலை எடுத்து வைத்து,மணமகனாய் போவான் என்று நினைக்கும் வேளையில்,காதல் மனரனமாய் கூட்டி செல்லும் என அப்போது தெரிந்திருக்கவில்லை...

காதலின் தனிமை இன்னும் கொல்லும்....

எழுதியவர் : சையது சேக் (25-Feb-18, 6:19 pm)
பார்வை : 211

மேலே