தமிழன் சிறக்க

தமிழர்கள் என்றும் எதிலும் தாழ்ந்தவர் அல்ல. நமது மனங்கள் கட்டுண்ட பிசாசுகள் போல் காட்டப்படுவது புவியியல் பிசகு. நாம் இனி தலையெடுக்க இனி விஞ்ஞான வழிகள் தீவிரமாக கட்டமைக்க வேண்டும். முதலில் திறமை மிக்கவர்களை புறம் தள்ளாமல் இணைக்க வேண்டும். ஜாதி மத பேதங்களை முற்றும் பின்தள்ள வேண்டும். பொருளாதார இட ஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் 10 வருடம் மட்டுமே. தனி சட்டம் மாநில அளவில் வர பாடு பட வேண்டும். அது மிக கடுமையாக இருக்க வேண்டும். தியாகங்கள் மதிக்க ப் படவேண்டும். ஜாதி மத உணர்வுகள் ஒவ்வொரு வீட்டின் மைய அறையில் மட்டும் அவரவர் பண்பாடு கலாச்சாரங்களை கடத்த பேசும் பொருளாக மாற வேண்டும். கல்வி அரசியல் அரசு கோப்புகளில் ஜாதி மத பெயர்கள் நீக்கப்பட வேண்டும். தமிழன் என்று மட்டும் இருமாந்து இருக்க வேண்டும். பின் முன்னேற்றம் தானாக வரும்.தமிழன் உலகத்தை ஆள்வான்.

எழுதியவர் : ஸ்பரிசன் (27-Feb-18, 5:27 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : thamizhan sirakka
பார்வை : 176

மேலே