மொழிப்பற்று

தமிழனாக இருப்பதில் பெருமை கொள்வோம்
தமிழுக்காக உயிரையும் கொடுப்போம்
தமிழ் எங்கள் மூச்சு
மூச்சிருக்குவரை தமிழில் முழங்குவோம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ..
ஆவேசமாக பேசிவிட்டு இறங்கியவரிடம்
மிக அருமையாக பேசினீர்கள் என்றேன்.
தேங்யு வெரிமச் என்றே கைகுலுக்கிப் போனார்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Mar-18, 2:30 am)
பார்வை : 269

மேலே