ஏட்டு பூவுக்கும் வாசம்
அரும்பு மீசை
முளைக்கும்போதே
அவள் மீது காதல் எனக்கு
அவளை அடி முதல் முடி வரை
படித்துவிட ஆசை
படித்தவுடன் மழலைகளை
இவ்வுலகிற்கு
அறிமுகப்படுத்த ஆசை
கடைசி மூச்சிருக்கும் வரை
என் மடியில் அவளை
தவழவிட ஆசை
அவளின் வெவ்வேறு பரிணாமங்களை
புரிந்துக்கொள்ள ஆசை
அவளை யாரென்று
எண்ணி எண்ணி நீங்கள்
பார்க்கிறீர்கள்
நான் என்னவள் அந்த
கவிதை கன்னியை சொன்னேன்...

