வாடும் பிள்ளைகள்

தாயின் முகம்காண பிள்ளை அழுவதைப்போல
ஈன் உலகத்தை கண்டோ வாடும்
பிள்ளைகள் நாம்...
பசுமையை அழித்து பசியால்
வாடும் பிள்ளைகள் நாம்...
உறவுகளை மறந்து ஒப்பற்ற வாழ்க்கை
வாழும் பிள்ளைகள் நாம்..
உதிரத்தையும் உயிர்தியாகத்தியும்
மறந்து வாழும் பிள்ளைகள் நாம்..

உன் தாயுக்கும் தாயகத்திற்க்கும்
நீ தரும் அவலம்
காண்டவனெல்லாம் சிரிப்பதும்
உண்டவனெல்லாம் உன்னை எதிர்ப்பதும்
தமிழா வாடா ....!
எதிர்த்து வாடா ...!
வென்றியுடன் வாடா ...!

அடுத்த படைப்பில் உன்

ஆனந்த் .கல்லை

எழுதியவர் : ஆனந்த் .கல்லை (7-Mar-18, 1:27 pm)
Tanglish : vaadum pillaigal
பார்வை : 56

மேலே