குளிர்காலம்

குளிரில் சிலிர்த்து
பணித்துளிகளை வெண் போர்வையாய்
போர்த்தி உறங்கும்
புல்வெளிகள் .

ஒளி கதிர்கள் தெளித்து
பனித்துளிகளில் புன்னகை உதிர்த்து
புற்களின்
உறக்கம் களைத்து
மெல்ல பனி போர்வை உரித்த
கதிரவன் .

எழுதியவர் : (7-Mar-18, 4:02 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 154

மேலே