தமிழா யார் நீ
தமிழா! யார் நீ?
தீமையை எரித்திடும் தைரியம்
நீதியை போற்றிடும் வல்லமை
சூழ்ச்சியை வெல்லும் திறமை
படைக் கண்டு அஞ்சாத வீரம்
விதி என்று உறங்காத மதி
மரணம் கண்டும் அறியாத பயம்
நுட்பமாக ஆய்ந்தறியும் அறிவு
சிறப்பாக நிர்வகிக்கும் ஆளுமை
வாழ்விலே கடைபிடிக்கும் வாக்குவன்மை
நெஞ்சத்தில் குடிகொண்ட நேர்மை
கபடமற்ற காதல்
உயிர்கள் அனைத்திலும் அன்பு
உறவுகளை அரவணைக்கும் பண்பு
சமநோக்கும் பார்வையுடைய தெளிவு
எதிப்புகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல்
உண்மையில் குடிகொண்ட பக்தி
செயலில் கொண்டுள்ள தூய்மை
வாய்மையில் கொண்டுள்ள நம்பிக்கை
எதிரியையும் எதிர்நோக்கி அழைத்திடும் குணம்
வறியோர்க்கு உதவிடும் மனம்
இவையெல்லாம் நீ தமிழா,
உதிரம் உறைந்து, உயிர் பிரிந்தாலும்,
உண்மை மறந்திடாதே,
உன் உரிமை இழந்திடாதே,
போராடு! உழைத்திடு!
உந்தன் சிறந்தவை!
உயந்தவை!
எதுவென உலகிற்கு உணர்த்திடு!
-கலைப்பிரியை