பெண்ணே நீ வாழ்க, வளர்க உன் புகழ்

பெண்ணின் அழகு மென்மைத்
தேடி பித்தாய் அலையும் ஆண்
பெண்ணைத் தன்னில்
ஒரு பாதி என்று நினைக்க செயல்பட
தயக்கம் கொள்ளவதேன் இன்னும்
பெண்ணின் மீது அவனுக்கு பொறாமையா
பெண்ணை அடக்கி ஆள துடிக்கும் ஆணவமா
பெண்ணைவிட வலிமை அதிகம் உனக்கு
அவள் மென்மை உனக்கிலையே
தாய்மை அவளுக்கு தந்தது இறைமை
இதை அறிந்தும் அறியாமல் நீ இருப்பது
ஆணவம் அன்றி வேறென்ன நண்பரே
சிந்திக்க செயல்படுக இந்த
சிறப்புமிக்க பெண்கள் தினத்தன்று
பெண்ணை மதிப்போம் அவள்
நம்மில் பாதி என்று உணர்வோம்
அவள் கற்பிற்கு வேலியாய் இருப்போம்
தாய் அவளை தெய்வமாய் போற்றுவோம்
வாழ்க பெண்கள் வளர்க அவர்கள் புகழ்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Mar-18, 10:00 am)
பார்வை : 69

மேலே