அம்முவின் காதல்

அழகிய பயணத்தில்
இனிமையாய் கவர்ந்தாய்-நீ
அன்றிலிருந்து…
ரசித்துக் கொண்டுதான்
இருக்கிறேன் உன்னை…

தினமும் உன்
வளர்ச்சி கண்டு
ஏங்கினேன்…
தினமும் உன்னை சிலர்
தொடுவதை கண்ட
பொறாமையால்…

என் வீட்டாரின் சம்மத்தோடு
என்னுடனே வாழ
வீட்டிற்கு அழைத்து
செல்ல திட்டமிட்டு
தோற்றுபோனேன் வீட்டாரிடம்…

போராடி இறுதியில் வென்றது நான்...

இன்று தினமும்
கண்விழிப்பதே உன் முகத்தில் தான்…
தினமும் சூடிக்கொள்வதே உன்னை தான்…

அம்முவின் மல்லிப்பூ காதல்…

எழுதியவர் : இலக்கியா (8-Mar-18, 10:01 am)
சேர்த்தது : இலக்கியா
பார்வை : 103

மேலே