பூவையர் தினம்

பூவையர் தினமாம்
பூக்கள் பூக்களாய் பூத்து மலர ,,,,!
பாவைகள் தினமாம்
மாசி பணியினில் பூங்காற்று மலர ,,,,!
பூலோக வனத்தில்
தேவதைகள் இங்கும் அங்கும் பட்டாம்பூச்சிகளாய் ,,,,!
இந்த எட்டாம் தேதியில் மட்டும் எப்படி இத்துணை வண்ணமோ ,,,,???
பார்வை எங்கும் தேவதைகள் ,,,,
ஏராளம் பாஷைகள் கண்களில் இந்நாளில்
இருந்தாலும் புரியுமே பாவையர் தினம் ,,,,
அன்னையாய் , தங்கையாய் ,,,,
அடிக்கும் அக்காவாய் ,,,,
தாங்கும் தாரமாய் அனைத்தும் பெண்மையே ,,,!
மாற்றார் வீடு சென்றிடினும் அன்பை விதைக்க தெரிந்தவள் ,,,!
அங்கு சிரமங்கள் தீன்றிடினும் சிரிக்க தெரிந்தவள் ,,,!
அவள் விழிகள் வடிக்கும் கண்ணீர் துளிகள்
அது காய்ந்து மாயட்டும் காலத்திற்கும் ,,,,,,!!!!
அவள் இதழ்கள் வடிக்கும் புன்னகையோ
இனி வீசட்டும் எட்டு திக்கும் ,,,,,,!!!!!!!!!
அன்புடன் பூவையர்களுக்கு ,,,,,,