சிறகுகள்
சிறகுகள் கவிதை இதனுடன் இணைத்துள்ளேன்
காயப்படும்போதுதான்
கனவுகள் சிறகை விரிகின்றன
சுகப்படும்போதுதான்
துக்கங்கள் களைய மறுக்கின்றன
நேசப்படும்போதுதான்
நிஜங்கள்
நிர்முலமாய் தெரிகின்றன
நீ
நண்பனாய் வந்தபோது
சிரித்துக்கொண்டே
வரவேற்ற என்னால்
உனக்கு சிறகுகள் முளைத்து
என்னை விட்டு பிரிந்தபோது
கண்களை நினைத்தது
உன் கண்ணீர்
பிரிவு என்பது
ப்ரிரிக்க முடியாத பக்கம்
வாழ்க்கையில் .....!
என்ன செய்ய ......?
மனதிற்கு இது மறக்க முடியாத பக்கம்
என் நினைவுகளிலி
என்றுமே - நீ
நிரந்தரமாய் .......