மோகன ராகம்


அவளும் பார்க்கவேண்டும்
அவனும் பார்க்க வேண்டும்
காத்திருக்கும் உள்ளங்களை
சேர்த்துவைக்கும் புதிய
சுயவரம் கல்யாண மாலை

மண்ணில் கிடைத்தை மகாலட்சுமியை
மைதிலியாய் போற்றி வளர்த்து
போட்டி வைத்து மனம் முடித்தான் சனகன்

புன்னகையை போட்டி பொருளாக்கி
மண்ணின் மைதிகளுக்கு எல்லாம்
மனம் முடித்து வைப்பவன்
இந்த சமூக சேவகன் மோகன ராமன்

லட்ச தீபங்களை ஆலயங்களில் இல்லை
வீடுகளில் எல்லாம் ஏற்றிவைத்த
மானுட பக்தன்

மாவிலை தோரணம் மங்கல நாதம்
ஒலித்திடும் மணப்பந்தல் கல்யாண மாலை
மோகன ராகம் தொடரட்டும்...
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Aug-11, 9:14 am)
பார்வை : 361

மேலே