கோவிலுக்கு (ள்) வந்துவிடு



எனது பிரயானங்கள்

அந்தப்பாதையில்

வேண்டப்பாலன

ஆயினும்...

உனக்காகவே

தினமும்..

அந்தப் பாதையை

அளக்கின்றேன்.

#

உன்

இதயப்படலை

திறக்காமல்

முற்றத்துப்படலை

விரியத்

திறந்துவிட்டதும்

யார்...?

#

மாலையில்...

சந்திரோதயத்தை

தரிசிக்கவரும்

எனக்கு

சூரியனின்

அஸ்த்தமனத்தை

ஏன் காட்டுகிறாய்....

#

என்

இதயக்கோவிலின்

வேள்வித்தீயாய்...

நீ யானதும்

ஏன்,,,,,?

#

என்

இஸ்ட தெய்வத்தை

அர்ச்சிக்கவேண்டும்

கோவிலுக்கு

வந்துவிடு

#

நீ

என்

கோவிலுக்குள்

வந்துவிடு

எழுதியவர் : mcafareed (7-Aug-11, 5:58 am)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 317

மேலே