சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 50 – ஸுந்த ரேச்வருநி ஜூசி – சங்கராபரணம்

தியாகராஜ ஸ்வாமிகள் கோவூர் ஈஸ்வரன் சுந்தரேசுவரனைக் குறித்துப் பாடிய ஐந்து கீர்த்தனைகளுள் ஒன்று.

பொருளுரை:

(வடிவழகனான) இந்த சுந்தரேசுவரப் பெருமானைச் சேவித்த பின் (மற்ற) தேவர்களைக் காணவும் மனம் வருமா?

அழகு மிகுந்ததும், சிறந்த காசித் தலத்திற்கு ஈடானதுமான இக்கோவூரில் விளங்கும் எங்கள் (சுந்தரேசுவரனை… வருமா?)

பாதங்களில் பொன் கொண்டிழைத்த நூபுரங்களும், கரங்களில் வைரங்கள் பதித்த கங்கணங்களும், மங்களம் தரும் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் பிரகாசித்துக் கொண்டு அழகு ததும்பும் (சுந்தரேசுவரனை… வருமா?)

ஒருபுறம் பிரமன் முதலிய தேவர்களும், ஒருபுறம் தேவலோகத்துக் கணிகையரும், மற்றொருபுறம் தும்புரு, நாரதர் முதலிய முனிவரும், வேறொருபுறம் அடியார்களும் துதி பாடும் (சுந்தரேசுவரனை… வருமா?)

குபேரனுடைய தோழனும், சந்திரனையணிந்தவனும், கோவூரில் வதிபவனும், இராசத குணமற்றவனும், இத் தியாகராஜனால் பூஜிக்கப்படுபவனும், வெள்ளிமலைக்கு (கைலாசத்திற்கு) ஈசனுமான (சுந்தரேசுவரனை… வருமா?)

பாடல்:

பல்லவி:

ஸுந்த ரேச்வருநி ஜூசி
ஸுரல ஜூட மநஸு வச்சுநா (ஸுந்த)

அநுபல்லவி:

அந்த முக ல வர காசிகி ஸமாந-
மைந கோ புரமந்து வெலயு மா (ஸுந்த)

சரணம்:

1. சரண முலநு ப ங்கா ரு நூபுரமுலு
கரமுல ரவ கங்கணயுக முலு ஸ்ரீ-
கர முக முந கஸ்தூரி திலகமு
மெறயுசுநுண்டு லாவண்யமுக ல (ஸுந்த)

2. ஒகசோ ப் ரஹ்மாதி ஸுரலு
ஒகசோ நிர்ஜர வார தருணுலு
ஒகசோ தும்பு ரு நாரதா து லு
ஒகசோ ப க்துலெல்ல பா டு (ஸுந்த)

3. ராஜராஜுநிகி செலிகாட யிந
ராஜசேக ருநி கோ புர நிலயுநி
ராஜஸகு ணரஹிதுநி ஸ்ரீ த்யாக –
ராஜ பூஜிதுநி ரஜதகிரீசுநி (ஸுந்த)

யு ட்யூபில் sundareshwaruni sankarabharanam ranjani gayatri என்று பதிந்து ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-18, 11:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே