நண்பர்கள் தின வாழ்துகள்...

பள்ளியில் கல்லூரியில் என, நட்பே!
நீ பல பரிமானங்களில் வந்தாய்..
ரத்த பந்தமில்லை, சொந்தமில்லை எனினும்..,
நண்பா! நீ என் இரண்டாம் தாய்..
நிலவில் கூட தண்ணீரை கண்டோம் - ஆனால்
உனதருகே கண்ணீரை கண்டதில்லை என் கண்கள்..
சில நேரங்களில் விழி ஈரமாகும் - நம் பிரிவின்போது
அது நாம் கொண்ட அன்பே....
ஹீம்ம்ம்... நம் சிறு இதயம் போதவில்லையோ...?
நமது அன்பை தேக்கி வைக்க....!
கருவறை வேறு.., இருந்தும் கல்லறை வரை தொடரும்
இந்த உறவு உருவானதெப்படி......?
சூழ்நிலையாலா..?
இல்லை....! அந்த சூழ்நிலையே இயற்கையால் உருவாக்கபட்டது தானே
நாம் நட்பு கொள்ள!!!
நட்பு எனும் சொல் இவ்வுலகில் இருக்கும் வரை....,
நம் நட்பு என்றும் அழியப்போவதில்லை...!!
நாம் அழிந்தால் கூட...
- என்றும் நட்புடன்..,
சரவணன்..