விடை கொடுத்த கல்லூரி பயணம்

*விடை கொடுத்த கல்லூரி பயணம்...*

கண்களின் வெள்ளை படலம் செந்நிறமாய்
உருமாறுகிறது...

விழியின்ஓரமதில் நீர்பெருக்கெடுத்து வழியினைத்தேடி
பித்தனாகி கொள்கிறது...

நான்கு வருட கல்லூரியை
நகைத்துக்கொண்டே கடந்துவிட்டோம்...

நேரம்முடிந்து திரும்பிபார்த்தால்
நினைவு மட்டும் மீதம் மிட்சம்...

கடந்துவந்த கல்லூரி மொத்த நாட்களை வர்ணித்தால்...

மிதமிருக்கும் இந்நாளும் போதாதே என்ன செய்வேன்...

மூளையின் மையத்திலும்
இதய துடிப்பினிலும்

கொட்டி கிடக்கும் சில நினைவுகளை வார்த்தைகளாக வரைகிறேன்...

உயிரோடு உங்களிடையே வாசிப்பில் உயிர்கொள்ளும் உணர்வுகளாக !

கவனமாக படிக்கவும் என்னை !

நான் விரும்பாத கல்வி...
நான் வெறுத்த கல்லூரி...
நான் ஏற்காத கல்விமுறை...
என்னை விலக்கிய ஆசிரியர்கள்...
என்னை சிறைபடுத்திய
கல்லூரி விடுதி...
என்னை கட்டிபோட்ட
விதிமுறைகள்...

என எல்லாவற்றையும் ரசித்தேன்...

நட்பு எனக்குள் ஊடுருவ மெய்மறந்தபடி...

கொஞ்சம் கொஞ்சமாக...
நாவின் நுணியில் தேன்துளி போன்று...

நான் அதிஸ்டமில்லாதவன்தான்..

ருசிக்க தொடங்கிய பொழுதே !
பெய்த மழைதுளிகளில் கரைந்து போனது அந்த தேன் துளிகள்...

நண்பன் என்ற நான்கெழுத்து பயில நான்கு ஆண்டு எடுத்த அறிவாளி மாணவன் தான் நான்...

தோழி எனும் இரண்டெழுத்து பயில நான்கு ஆண்டு எடுத்த அதிபுத்திசாலியும் நான்
தான்...

கருப்பு பலகையின்முன்
இரும்பு இருக்கைகள்.
இருபாலருக்கும் வலது இடதுவென பிரிவுகள்.

காலத்தை கூறுபோட்டு
கல்விபயிற்றுவிற்கும் ஆசிரியர்கள்...

கரும்பலகையில் வெண்ணிற எழுத்துகளுக்கு பக்கத்திலேயே...

மின்சார வெளிச்ச பலகையும் பாலிதின் காகிதமும் அதன் மேல்
படுத்திருக்கும் பாடங்களும்...

ஜன்னல் ஓரத்தில் உயர்ந்து எட்டிப்பார்க்கும் மலைகளும்...

அடிக்கடி அனுமதியின்றி
உள்ளே வந்துசெல்லும் தென்றல் காற்றும்...

அதற்கு எதிரிபோல மின்சார கல்வி வகுப்பறையில் மின்சாரம் கொண்டு காற்று வீசும் காற்றாடியும்...

மின்சாரம் பஞ்சம் என சொன்னாலும் பகலிலும் பளிச்சென்று பல்இளிக்கும் பகல்வகுப்பறை விளக்குகள்...

கரும்பலகைகளில் எங்களுக்காக உயிர் நீத்த வெள்ளை பேனாக்கள்...

காலை நுழையும் பொழுது
சாம்பல் நிறத்தில் படர்ந்திருக்கும் தூசிபடலங்கள்...

அதை அழிக்க கைகள் ஏந்தும் வெண்மை காகித ஆயுதங்கள்...

இரவை செல்போன் துணைகொண்டு வென்று தூக்கத்திற்கு தடையிட்டு உறங்காத கண்களை...

இமைகளுக்கே தெரியாமல் உறங்க வைக்கும் பெனிமோன் சார் , ஜேஸ்மின் மேம், கைச் ஓடி மேம், புன்னகை ஸ்டெபி மேம்...

இவர்களுக்கு இடையில் வந்தபடி சுதந்திரம் தந்தது போல் உள்ளம் வணங்கும் வினோ ருபன் சார்...

உலர்ந்து போன கண்களை அரட்டியபடி
அதிரவைத்து பாடம் கற்பிக்கும் அடித்தாலும் பாசத்தால் அணைக்கும் மற்றவர்களை போல் படித்தவன் படிக்காதவன் பாகுபாடு பார்க்காமல் பேசும் பாதியிலே பறந்து போன பேரன்பு நபிசா மேம்.

பறந்து போனவருக்காக பறந்து வந்து தூங்க வைக்கும் சார்( இன்னும் பேர் தெரியாது அந்த அளவு தூக்கிட்டேன் மண்ணிக்கவும்)

நேரம் கடந்து போவதை அடிக்கடி நினைவு படுத்தும் கல்லூரி மணி ஓசை...

நாள்விடுமுறை விட்டாட்போல் இடைவேளை பேரானந்தம்...

பாக்கெட்டில் கிடக்கும் சில சிறிய காகித பணங்களை அந்த இடைவெளயில் காவு வாங்கும் ருசியான உணவுகள் விற்கும் கேன்டின்...

நான்கு வருட கருவறையான கல்லூரி...
எங்கள் இருப்பிடமான தோவாளை...

வயிற்று பசியை அறிந்து நேரத்திற்கு ஓலிக்கும் மதிய உணவு மணி ஓசை...

பசியில் மெதுவாக சுழலும் கைக்கடிக்காரம்...

கோவத்தில் நொடிக்கு தடவை மணி எத்தனை என ? கேட்கும் கேள்விகள்.

கோவத்தில் கைக்கடிகாரத்தை கழற்றி கையிலே கொடுக்கும் நண்பன்...

கடலைப்போல பசியானாலும், மழை துளியைப்போல உணவானாலும் பகிர்ந்து உண்ணும் தெய்வ குணம்.

கிழக்கிலும் ,மேற்கிலும்,வடக்கிலும் ,தெற்கிலும் இருந்து இரும்பு பாத்திரத்தில் மூடி வைத்த வரப்பட்ட சாப்பாடுகள்,ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை...

அதை அள்ளி ஒன்றாக
அள்ளி உண்ணும் அமிர்த ருசி...

சன்டையிட்டு போட்டியிட்டு அள்ளி உண்ணுகையில் வேங்கைகளாகும் ஆக்ளின், இளம் வேங்கை பிரான்சிஸ்...இவர்களோடு யான்...

விடுதி உணவில் தப்பிக்க
எங்களிடத்தில் ஓடிவரும் ரோகித்,கருண்

செத்தாலும் பரவாயில்லனும் அதையே சாப்பிடும் மீதி விடுதி நண்பர்கள்...

பாத்திரத்த திறக்கவும் காணமல் போகும் வெண் சோறு...

மேலிருந்து ஊற்றுகையில் தரையை தொடுமுன் காணாமல் போகும் மீன் குளம்பு...

மதிய இடைவெளியில் கண்களுக்கு குளுமை தரும் கல்லூரி ஜூனியர் கேள்ஸ்...

அதைக் காண்பதற்கு வடக்கும் ,தெற்கும் திரும்ப திரும்ப போர் தொடுக்கும் எங்களை சிறையெடுக்க நினைக்கும் கல்லூரி ஒழுக்க கமிட்டி...

அந்த சிறையில் விழுந்து காகிதங்களில் எழுதப்பட்டு பல்லாயிரம் கிலோவுக்கு விற்கப்பட்ட அப்பாலஜிகள்...

காலை வகுப்பறை மணியடிக்க சில நிமிடம் முன் கிழக்கில் இருந்து மேற்கில் வருகை தரும் கல்லூரி தேவதைகள்...

ஆண்களையும் பெண்களையும் பிரித்தாலே ஒழுக்கம் என பிரித்து வைத்த அதிமேதாவி நிர்வாகம்...

வகுப்பறை வாசலில் விழி வைத்து அந்த தேவதைகளை தர்சிக்க காத்திருக்கும் நாங்கள்...

கல்லூரியில் முதன் முதலாக ஏறிய மேடை,
பின் ஏனோ இறுதிவரை காரணங்களின்றி என்னை வெறுத்து நிராகரிக்கப்பட மேடை...

முதன் முதலாக பேசிய அம்மா கவிதை, பதிலுக்கு அனைவரும் தந்த அன்பு முத்தங்கள்...

கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்ற பெருமையுடன்,

வகுப்பறையை புன்னகைக்க வைக்க , எங்களுக்கு துணையாக இருக்கைகளில் இருக்க அமர்ந்திருக்கும் மச்சான் ஸ்னோவின்...

கல்லூரியின் பேரழகன்
படிப்பில் வல்லவன் ஆனாலும் எங்களோடு படிக்காமல் புன்னகைத்தபடி படித்து பாஸ் ஆகும் மச்சான் டிஸ்னோ...

எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உன்ன தேடி வருவேன் என்றபடி உருவத்தில் உயர்ந்து படிப்பிலும் , நண்பர்களின் சந்தோசத்திலும் சிறப்புதரும் மச்சான் முத்துகுமார்...

கருமை மீசை நரைத்து,எங்கள் கல்லூரியலே முதியவர் போல் எங்களால் பெரியவர் என அழைக்கப்படும் நட்புக்கு தங்கம் , உருவங்கள் தான் வேறு உள்ளமல்ல , மச்சான் சாஜின்...

திரு திரு முழியோடு கொஞ்சம் புன்னகையோடு மலையாள நட்பை அள்ளி தரும் என்ட மச்சான் கருண்...

நான் விடுதியில் நுழைந்ததும் மூன்றாவதாக ஹலோ என்று அறிமுகம் ஆனவன் இவன் தான் !
அப்போதே தெரியவில்லை கேரளத்தில் இருந்து நட்பை அள்ளி கொண்டு வந்தவன் இவன் என்று...
மச்சான் ரோகித்...

கருமை உடலும் ஆணழகு.படிப்பு தான் தன் வாழ்க்கையா நினைச்சி அடிக்கடி சிரிச்சப்படி கொஞ்சம் கஸ்டப்பட்டு காமெடி பன்னும் மச்சினி சுரேஸ்...

நெத்திக்கு கீழ் கண்களுக்கு அணிகலன் அணிபவன்.கோவை பயணம் துணையானவன் மச்சான் திருவாளி மார்பன்...

கொஞ்சம் காமெடி, கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் பிரச்சனை என கலந்து வீசும் என்ட கேரள மச்சான் ஆக்ளின்...

எப்பவும் படிக்கிறவங்களுக்கு நட்பு பாசம்,மற்ற திறமைகள் எல்லாம் குறைவுனு கேள்விபட்டதெல்லாம் பொய்யாக்கிய மச்சான் அருள் பிரேம்குமார்...

எப்பவுமே பாசத்தோடு புன்னகைத்து பேசும் , நட்பிற்கு நானும் உண்டு என உறவாகும் மச்சான் பிரான்சிஸ்...

அப்பம் அப்பம் புன்னகைத்து ,அப்படியே படித்து முடித்து ,நட்பையும் கையில் கோர்த்து திரியும் மச்சான் செல்வா...

எப்பவும் அமைதி ,அதிகம் பேசாத பச்சிளம்குழந்தை,
திறமைகளை உள்ளே வைத்தவன். என்னோடு சற்று நெருக்கமாக சில நேரம் தென்றல் போல வீசி சென்ற நட்பை வீசிய மச்சான் ஜோசப்...

அன்றும் முதல் இன்று வரை இன்னும் இவன் குணம் மாறியதாக தெரியவில்லை. நட்பின் குணமல்லவா ! என்ட கேரளத்து மச்சான் சபின்...

எல்லாத்திலையும் சிறப்புதான்.கருமை நிற கண்ணன் குணம் கொஞ்சம்.பாசக்கார நட்பு அதிகம் கொண்ட மச்சான்
லாட்வின்...

மேல உள்ளவனும் இவனும் கொஞ்சம் நகல் தான். எல்லாரையும் பாசக்காரனும் சொல்ரதுனால இவனும் எல்லாரை மாதிரி சமம் இல்ல கொஞ்சம் மேல தான் மச்சான் அன்டோ அரவிந்...

கண்ணுக்கு மைபோட்ட அழகன்.கடந்து போகட்டும் சில கசப்புகள் மச்சான் ஆதித் ஜோசி...

மேல உள்ள எல்லாரும் நண்பர்கள் ஆனா இவன் என்னோடு நான்கு வருடம் ஒன்னா பயணித்த நண்பேன்டா !
எத்தனை துன்பத்தோடும் என்னோடு கரம் கோர்த்த நண்பன் மச்சான் தலைவா! செல்வா !

இடது பக்கம் முதல் வரிசையில் முதலாய் அமர்ந்தபடி
புன்னகைகளை உள்ளே மறைத்து வைத்து , பௌர்ணமி நிலவை மௌன தோற்றமாக்கிய, சிறந்த அறிவாளி ! சிறநத பேச்சு திறமை தோழி !
கல்லூரி முடியும் முன்னரே தன் வாழ்க்கையை ஆரம்பித்த முதல் தோழி !
இருமணம் இணைந்து இன்று போல் என்றும் வாழ்க ! தோழி பிரிம் ரோஸ்...

நிலவின் சேலையை உடுத்தி கொண்ட அழகி,புன்னகையை மறைக்காத அழகு, பரிசு நட்பின் சீட்டு குழுக்கையில் எனக்கு நட்பு பரிசானவள். தோழி வெண்நிலா...

அடிக்கடி சினுங்கும் அழகு,அப்படியே பறக்கும் வேகம், இளம் பாடகி,
வீட்டின் கடைகுட்டி போல
எங்கள் வகுப்புக்கு இவளாகத்தான் இருப்பாள் தோழி மெர்சியா....

என் கண்ணுக்கே புலப்படாது இவர்களுக்கு அப்பால் மறைந்துகிடப்பவள்.என் வகுப்பில் மலர்ந்து கிடக்கும் சிறிய மலர் இவளாகத்தான் கிடப்பாள்.என் தங்கையின் பெயரில் நயத்தை தவிர மீதி கொண்டவள் தோழி அபியா...

கம்பீர உடல், நல்ல குணம்,உருமாறிய மல்லிகை தோற்றம்,விளையாட்டிலும் வென்று கல்வியிலும் வெல்லும் தந்திரம். தோழி நந்தினி...

பெயருக்கேற்ற தோற்றம்,
அடிக்கடி சிந்தும் புன்னகை துகள்,அதிலே வீசும் பூவின் மணம், தோழி மதி

விரல் போன்ற உடல்,
நெற்றியில் பறக்கவிடும் கூந்தல் ,அமைதியாக நடிக்கும் ராட்சசி, தோழி அனிஷா...

மெலிந்த நிலவு, மௌன சிரிப்பு, கரைந்த குரல் ,
காகிதங்களில் கடந்து போகும் கல்வி, தென்றல் காற்று , தோழி சர்மி

கடினபட்டு வட்டமாக்கப்பட்ட முகம், அதில் வீங்கிய கண்ணம், காற்றில் பறந்து போகும் வண்ணத்துபூச்சி தோழி ஸ்டெபி...

மூக்குத்தியழகி, பிறை நிலவழகி, நீர்வீழ்ச்சி போன்ற புன்னகை,நெற்றி உயரம் , நீங்காத உருவம் கேரளத்து தோழி ஆதிரா...

இவளைப்பார்க்கும் போதெல்லாம் என் தங்கையின் நினைவு இவள் முன் வந்து விடும், வெண்மேக முகம், தங்க புன்னகை, வகுப்பில் மலர்ந்த தாமரை, கோர்த்தி விடும் கூந்தல் , கேரளத்து தோழி ஹெளினி...

இவர்கள் அனைவரும் தூர்ரத்தில் இருந்தே ரசித்தப்படி, பாசம் காட்ட தெரியாத, வகுப்பறையில் மூலையில் இரும்பு இருக்கைகளுக்கு கண்ணங்களால் முத்தம் கொடுத்து மகிழும் நான்...

வகுப்பறை தாண்டிய நண்பர்கள், வரையறுக்க முடியாத பாசங்கள்.

ஈசி டெலன்டிஸ் தோழிகள்...பெவி கோவையில் பல்பாக்கிய ஆன்சி,மதி,(மீதி பெயர்கள் தெறியாத தோழிகள்)

கல்லூரி மச்சான்கள்
மச்சான் விபின்,கே.கே ,அஸ்வின்,ஆலன்,டேவிட்,சுபி,தங்கம்,பெலிக்ஸ்,சூரிய ஆனந்த்,சாப்ரின் டயாஸ்,ராஜேஸ்,அனந்து,முத்துகிருஸ்னன்,அருவிந்,ஸ்டெபின்,அஜின் ரஜோ, மீதம் பெயர் சொல்லாத அனைவரும்...

விடுதி உயிர்கள் மச்சான் டேனி,கிராஸ்டன்,கிரிஸ்,ஜெபின்,பிரவின்,ஐயாதுரை,நாகராஜ்,சரவணா,மகேந்திரா,அஜித்,அருள்,முத்துகுமார்,குருபாரதி,தர்மதுரை

மாமா ,சித்தப்பா, பெரியப்பா,அங்கிள்,ஆண்டி,அத்தை ,ஐடம், லவ்வரு,மச்சான்,மாப்பிள்ளை இப்படி உறவுகள் சூடிய நண்பர்கள்...

விடுதியல் கூட்டமா இரவு தெரியாம பார்க்கும் பிட்டு படங்கள், நிரம்பி வழிந்த ஹார்ட் டிஸ்குகள்,மாதம் சோகம் மறைக்கும் மதுபானங்கள், காதல் தோல்விக்கு மருந்து இதுவென நண்பன் அறிமுக படுத்திய சிவன் பானம், திரையிட முடியாத ஏ நினைவுகள்.

இப்படி நீண்டு கொண்டே போகும்...

அதனால் தானோ நிறுத்தி வைக்கப்பட்டது...எங்கள் கல்லூரி பயணம்...

நிச்சயம் நான் உங்களுக்கு சிறந்த நண்பனாக இருந்திருக்க மாட்டேன்...

நிச்சயம் நீங்கள் எனக்கு இருந்தீர்கள்...

காலம் என்னவோ எனக்கு கொடுத்த சில கசப்பு சம்பவங்கள்...

என்னை வாழ்க்கையை கொஞ்சம் தனிமையாகவே பயணிக்க வைத்துவிட்டது...

ஒருத்தி தந்த வலிகள் வாழ்வில் பெண்கள் எல்லோரையுமே தூரம் நிற்க வைத்து பார்க்க வைத்தது...

இப்படி என் வாழ்க்கை கசப்புகளை இனிப்பாக்கிய நண்பர் கூட்டம் பிரிவுயும் நேரம்...

என் இதய துடிப்புகளும் கோவத்தில் கண்டபடி துடிக்க ஆரம்பித்துவிட்டது...

காலத்தின் ஓட்டம்
இனி நம்மை சந்திக்க விடுமோ ! விடாதோ !

நிச்சயம் உங்கள் அனைவரையும் தூரம் நின்று ரசிக்கும் ஒருவனாக நான் இருப்பேன்...தொடர்ந்து உங்களுக்கே தெரியாமல்...

என்றும் உங்கள் நினைவுகளை உள்ளத்தில் சுமந்து கொள்ளும்....

வாழ்க்கையில் நீங்கள் என்னை மறந்தாலும், உங்களுக்காக...

உங்கள்...

நண்பன்
✍🏻இருதய ஆஸ்ட்ரோ.த

மீண்டும் வாழ்வில் சந்திப்போம்...
வாழ்க்கை சந்திக்க வைக்கும்...

😌😌😌😌😌😌😌

எழுதியவர் : இருதயா.த (18-Mar-18, 9:30 pm)
சேர்த்தது : த இருதயா
பார்வை : 1264

மேலே