எழுத மறுக்கும்

தேர்வுக்குச் செல்வோம்
தேர்வு நேரம் முடிந்த பின்

எழுதுகோல் எழுத மறுக்கும்
எழுதும் போது பாதியில்

வினாத்தாளை மறைக்கும்
வினோதமான படலம்

பள்ளி செல்லும் வழியில்
பாதை தனை மறப்போம்

வீடு வர நடந்தால்
வேறிடம் செல்லும் - நம் வீடு

"ஆ" என அலறுவோம்
அலறல் ஒலி வெளி வராது

ஓடிப் போக எத்தனிப்போம்
ஓரிடத்திலேயே ஓடிடுவோம்

இத்தனை இடர்களில்
ஏதாவது ஒன்றை
அத்தனை பேரும்
அடைந்திருப்போம்.....

சிறு வயது கனவில்.

🌺இன்னிலா🌺

எழுதியவர் : இன்னிலா (19-Mar-18, 12:17 pm)
Tanglish : elutha marukkum
பார்வை : 47

மேலே