பிஞ்சு மனம்

பத்து மாதம் கருச் சுமந்தவளை
காலனவன் பறித்து விட்டான்
ஏதாே குற்றம் அவனை
ஆயுள் கைதியாக்கியது
மூன்று மணி நேரம் முகம் பார்த்து
வாய்க்கரிசி பாேட்டு விட்டு
சிறைவாசம் செல்லும் தந்தை
அனாதையாகிப் பாேன பிள்ளை
வழியின்றி ஓடுகிறது
அப்பாவின் அணைப்புக்காய்
சிறைவாசம் தேடி
என்ன செய்யும் பிஞ்சு மனம் ......