அம்மா

அம்மா



உன் உயிரில் பாதியை கொடுத்தது
என்னை உயிர்ப்பிக்க செய்தாய்
என் உயிர் அம்மா...

உலகம் அறியாத வயதிலும்
நான் அறிந்த முதல் உலகம்
நீ தான் அம்மா...

நான் எழுதி படித்த
முதல் கவிதையே உன்
பெயர் தான் அம்மா...

தந்தை இல்லையென நான் ஏங்கியதுமில்லை
தாயே நீ ஏங்கியதும்
எனக்காக தான் அம்மா...

கஷ்டங்கள் பல வந்தாலும்
கவசமாய் என்னை காத்தது
உன் பாசம் அம்மா...

இளம்வயதிலும் நான் இன்னும்
குழந்தையாகவே வளம் வருகிறேன்
உன் அன்பால் அம்மா.....


உன் அன்பின் முன்னால் அமிர்தமே ஈடில்லை..
அம்மா....


Write
by
T.Suresh.

எழுதியவர் : சுரேஷ் (20-Mar-18, 5:03 pm)
Tanglish : amma
பார்வை : 1662

சிறந்த கவிதைகள்

மேலே