இடமாற்றம் செய்யப்பட்ட என் தோழிக்கு

எங்கிருந்தோ வந்து என்னை
எனக்கே பிடிக்கவைத்தாய்,
இதயத்தில் அன்பை வளர்த்து
இணைப்பிரியா உயிர் தோழியானய்,

உயிருக்குள் பிரிவை தரமுடியமால்
இறைவன் சதி செய்தனோ,
இடத்தைமாற்றி இன்பம் கொள்கிறனோ,

நீயில்லா அலுவலகம்
வாசமில்லா பூக்களாய் மலர்கின்றது,
ஒளியில்லா நிலவாய் தோன்றுகிறது,

தொலைதூரம் நீ சென்றாலும்,
தொடுதிரையில் குரல் கேட்டாலும்,
இறைவன் விழிதிரையிலிருந்து பிரித்தாலும்,
நம்நட்பில் இடைவெளியே இல்லையாடி,

உன் அலுவலகப்பணியில் நீ மென்மேலும்
வெற்றியடைய வாழ்த்துக்கள் தோழி
என்றும் உன்நட்புடன் நாங்கள் ……………….

எழுதியவர் : புதுகை செநா (20-Mar-18, 9:30 pm)
பார்வை : 4595

மேலே