தமிழ்த்திரு திமிர்நாடு

சூரியக்கதிர் புதைக்கும் தொடர்மலை மேற்குமழை மேகங்களை முத்தமிட்டு தரைத்தவள எத்தனித்து

பாலையில்லா நால்வகை நிலத்தழுவலில் வறண்டிடா உருவான ஆற்றுப்படுகையின் வரண்ட கம்பள விரிப்பில் கிளை கொண்ட பசுமை செறிந்து

முக்கூடலாய் முட்டிக்கொண்ட நீலநீரின் குதூகலத்தில் அவேச அரற்றிலில் கரை தவழ்ந்து அரண் அமைத்து

கருகிடா வெய்யிலும், மூழ்கிடா மேகநீரும், உறைந்திடா பனித்துளியும் சுளர்ச்சிமாற்றி இயற்கை காதலில் நனைந்து

உலகின் தொன்மமும் இயற்கையின் இணக்கமும் ஊடல்கொள்ள மனிதவள ஆதிக்கச் சித்தாந்தத்தில் சிக்காது தனித்திமிறின் அடையாளம்

எழுதியவர் : யாசிகன் (21-Mar-18, 4:10 pm)
பார்வை : 140

மேலே