இ
((((((((((((((((((((((((( இ )))))))))))))))))))))))))
********************************************
இமையை திறந்து தூக்கம் கலைத்தால்
இதய துடிப்பில் அர்த்தம் கிடைக்கும்..!
இலக்கை நோக்கி சிறகை விரித்தால்
இமய அளவு வெற்றிகள் கிடைக்கும்..!
இரவு பகல் மாறுவது போல
இன்பம் துன்பம் இயற்கையாய் நடக்கும்..!
இலட்சிய பாதையில் பயணம் தொடர்ந்தால்
இடர்கள் கூட பூக்கள் கொடுக்கும்..!
இன்னல் என்று எதுவும் இல்லை
இறைவன் தரும் சிறிய பயிற்சி..!
இறுதி வரை முயற்சி செய்தால்
இகழ்ந்தவன் அடைவான் பெரிய அதிர்ச்சி..!
இளமை என்பது மனதில் இருந்தால்
இரத்தத்தில் இருக்கும் என்றும் சுழற்சி..!
இன்று செய்யாமல் நாளையை நினைத்தால்
இருவது வயதில் பெறுவோம் முதிர்ச்சி..!
இலையை சுமக்கும் மரத்தின் கிளையில்
இனிக்கும் கனிகள் காய்ப்பது போல
இழிவை தாங்கும் மனதில் எல்லாம்
இன்றி அமையாத வலிமை பிறக்கும்..!
இரையை தேடும் பறவைக்கு மட்டும்
இரைப்பை தினமும் நிறைவது போல
இடைவெளி இல்லாமல் நாமும் உழைத்தால்
இழந்தது எல்லாம் திரும்ப கிடைக்கும்..!
இயலாது என்று எதுவும் இல்லை
இழுத்து அடித்தால் இரும்பும் உடையும்..!
இறங்கி செய்ய துணிவு இருந்தால்
இடியும் கூட இசையாய் கேட்கும்..!
இறப்பை நினைத்து பயம் கொண்டால்
இருமல் கூட இடுகாடு காட்டும்..!
இருக்கும் வரையிலும் வாழ நினைத்தால்
இருக்கும் இடத்தில் சொர்க்கம் கிட்டும்..!
இருக்கும் வரையிலும் வாழ நினைத்தால்
இருக்கும் இடத்தில் சொர்க்கம் கிட்டும்..!!!
இப்படிக்கு
இளம்கவி
இராஜ்குமார் 😉