விடியலை தேடி

தலைப்பு:- விடியலைத் தேடி
----------------------------------------------------
விழிகளில் வலிகளை சுமந்து கொண்டு
விடியலை தேடிய இளைஞன் நான்..!
என் வழியில் எல்லாம்
வருத்தமும் வறுமையும் மட்டும்தான்..!

கவலையில் நான் இருந்தால்
காலம் என்னை முடித்திருக்கும்..!
கால்களில் வேகம் கூட்டி
கடக்கும் நேரத்தை விரைவாக்கினேன்..!

மலைத்து நான் நின்றுவிட்டால்
மணலும் கூட அனலாகும்..!
மனதில் மதி கொண்டு
மாற்றம் பெற போராடினேன்..!

வாய்ப்புகள் எனக்காக
வாசலில் காத்திருக்கவில்லை..!
தேடி தேடி தேய்ந்து போன
என் பாதங்கள் இதற்கு சாட்சி..!

முயற்சி மட்டுமே என் மூலதனம்
முடிவுகள் வெற்றியில்லை..!
பயிற்சியாக நினைத்துக்கொண்டு
பழக ஆரம்பித்தேன் தோல்விகளை..!

பல தோல்வியின் அனுபவம்
பரிசாக தந்தது ஒரு வெற்றியை..!
விடியலை தேடிய என் பயணத்தில்
விடுதலை பெற்றது வறுமைகள்..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:54 pm)
Tanglish : vitiyalai thedi
பார்வை : 218

மேலே