பதின்ம வயது

பழைய பள்ளி
புதிய பாடம்
கம்பிகளை
கடன் கொடுத்த
சன்னல்கள்

காற்று வந்துபோகும்
வகுப்பறையில்
நிலையான தென்றலாய் நீ

பாதியை கடந்த-நம்
பதின்ம வயது
முதல் வரிசையில் நீ
மூன்றாம் வரிசையில் நான்
நடுவில் ஒற்றை
நாற்காலி

ஆசிரியர் எடுத்த
அகநானூற்றுப் பாடல்
தெளிவுரையில்லாமல்
தெளிந்தது
நமக்கு மட்டும்.

க.தங்கமணி

எழுதியவர் : க.தங்கமணி (5-Apr-18, 11:43 am)
சேர்த்தது : தங்கமணி
பார்வை : 44

மேலே