விடியல்

விடியலைக் காணும் நோக்கில்
இருள் கிழிக்க ஒளிக்
கீற்றை கையினில் ஏந்துவோம்
ஏந்திய பின் சுட்டுவிடுமே
எனும் அச்சம் கொண்டு
இறக்கிவிடாதே அதன்
ஊடே உரக்கக் குரல் அதிருள்
கிழித்து உன்னுள் மருள்
நீக்கி படைக்கும் ஓர்
புதியது ஓர் உலகம்...!

எழுதியவர் : விஷ்ணு (7-Apr-18, 6:15 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : vidiyal
பார்வை : 78

மேலே