எண்ணிய எண்ணியாங்கு எய்துப

சுரேஷ்... இவனுக்கு..
முயற்சி... பயிற்சி
தன்னகம்...
இவனாலும் வளர்கிறது
தமிழகம்...

அரசர்கள் சாலைகள்
அமைத்தது வரலாறானது..
சுரேஷ் நெடுஞ்சாலைகள்
அமைப்பது சிறப்பானது...

படிக்கும்போது கல்லூரி
முதல்வர்..
பணி புரியும்போது
தமிழக முதல்வர்...
முதன்மையானவர்களோடு
நட்பாடுவதில் முதன்மையானவன்..
திட்டம் போட்டு திட்டங்கள்
கொணர்வதில் தீர்க்கமானவன்...

படிக்கும்போது தியோடலைட்
தொலை நோக்கியில்
இவன் தூரத்தையும்
உயரத்தையும் பார்க்கும்போதே
தன் வாழ்வின் ஒவ்வொரு
தூரத்திலும் தன் உயரத்தையும்
பார்த்திருப்பான் போலும்...
எண்ணிய எண்ணியாங்கு
எய்துவதில் கண்ணும்
கருத்துமாய் இருக்கிறான்...

சப்கிரேடு சஃப்பேஸ்
பேஸ்கோர்ஸ் என அடுக்கடுக்காய்
அமையும் சாலைகள்...
என்ஜினியரிங் புரக்யூர்மென்ட்
கன்ஸ்ட்ரக்ஷன் இவற்றில்
அற்புதமாய் இவனது வேலைகள்...

திருப்பங்களில் வாகனங்கள்
மீது ஏற்படும்
மைய விலக்கு விசை...
அதனை சமநிலை பெறச்
செய்யும் சூப்பர்எலிவேஷன்..
வாழ்வின் திருப்பங்களிலும்
சமநிலை அதுவே இவன் நிலை...
பொறியியல் கண்காணிப்பில்
நெடுஞ்சாலை இவனுக்கு
பஞ்சு மெத்தை...

இனிய உன் பிறந்தநாளில்
இன்னும் இன்னும்
உயர்நிலை அடைய
அன்பான வாழ்த்துக்கள்...
இதுவரை ஆற்றிய
பணிகளின் உந்துசக்தியில்
உனக்கு சிகரங்கள்
தொடும் தூரத்தில் ...

உன் பார்வையில் படும்
பூக்கள் எல்லாம் வாடுவதில்லை
அவற்றை உன் காமிராவில்
சேமித்து வைப்பதால்...
பயணிக்கும் பாதையெல்லாம்
வசந்தங்கள் உன்னை வரவேற்க
வாழ்த்துக்களுடன்...

அன்பன்... நண்பன்...
ஆர்.சுந்தரராஜன்.
👍🙋🏻‍♂😀🌷🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (8-Apr-18, 10:46 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 196

மேலே